மலையக மக்கள் சுகம் அனுபவிக்கும் மக்கள் அல்ல. அவர்களின் வாழ்வாதாரம் சுகாதாரம் கல்வி, பொருளாதார அபிவிருத்தி போன்றவை அரசாங்கம் என்ற ரீதியில் கவனிக்கப்பட வேண்டியவை என தெரிவித்த ஜனாதிபதி நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி மலையக பிரதேசங்களில் வேறுபாடு அற்ற சமமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இரண்டு வருட ஆட்சி காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியை பொறுப்பேற்ற நான் அடுத்தடுத்து இரண்டு முறை நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளேன்.

அமைச்சர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் மலையக மக்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் எழுப்புகின்றனர். அரசாங்கம் என்ற ரீதியில் மலையக மக்களுக்கு விசேடமாக சலுகைகள் செய்ய காத்திருக்கின்றேன்.

வறுமையை எதிர்கொள்ளும் மக்கள் இந்நாட்டில் அநேகமானோர் இருக்கின்றனர். ஆகையால் இந்த வருடத்தை வறுமை ஒழிக்கும் வருடமாக நாம் திட்டமிட்டு செயல்படுகின்றோம். தேயிலை தொழிலை மேற்கொள்ளும் இம்மக்கள் தேசிய வருமானத்தில் முதலிடம் வைக்கின்றனர்.

இன்று தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. மக்களின் சிரமங்களை போக்குவதற்கு நாம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் அதேவேளை நல்ல நாட்டை உருவாக்க சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கை குடும்பத்தின் வருமானம் பொருளாதார சிக்கலிருந்து மக்களை விடுவிக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சுகாதாரம் கல்வி போன்றவைகளில் இம்மக்களுக்கு சுதந்திரமான சேவையை உருவாக்கி அதனை பாதுகாத்து முன்னேற வைக்க வேண்டிய நிலை வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இம்மக்களுடைய பொருளாதார அபிவிருத்திக்கு மலையக அமைச்சர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இன்று மாலேபே சைட்டம் தனியார் பல்கலைகழகத்தில் எற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அணைவரும் ஒரு மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்த செய்து தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக அடுத்த வாரம் இந்த நடவடிக்கையை நான் முன்னெடுக்க உள்ளேன். பல்கலைகழகங்களில் வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதற்காக பல்கலைகழகத்திற்கு செல்லும் மாணவர்கள் ஒழுங்காக வகுப்புகளுக்கு சென்று பாடங்களை கற்றுக்கொள்வது தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

வருடம் ஒன்றிற்கு 75,000 தொடக்கம் 80,000 வரையிலான மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கும் வகையில் கல்வி மட்டம் உயர்ந்துள்ளது.

ஆகையினால் பல்லைகழகத்திற்கு செல்லும் மாணவர்களுடைய பிரச்சினைகளில் அதிதி கவனம் செலுத்தப்படும். அதேபோன்று மாலேபே சைட்டம் கல்லூரியின் மாணவர்களின் பிரச்சினையில் அதித கவனம் செலுத்தப்படும்.

அதேபோன்று இந்நாட்டில் எதிர்பாலம் பிள்ளைகளின் கைகளில் தங்கி இருப்பதனால் அவர்களின் நலத்தில் அதிக கவனம் செலுத்த அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செயல்பட காத்திருக்கின்றோம்.

மலையகத்தில் வாழ்கின்ற மக்களுடைய லயன் வாழ்க்கை ஒழிக்கப்பட்டு தனி வீடுகள் அமைத்து அவர்களுடைய பொருளாதார அபிவிருத்தியை மேலோங்க செய்ய அணைவரும் ஒன்றுப்பட வேண்டும் என தனது உரையில் அவர் மேலும் தெரிவித்தார்.