(கனகராசா சரவணன்)
ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்த திருவிழா நேற்று 12ஆம் திகதி மாலை தேர்த்திருவிழாவை எட்டியிருந்தது.
இதன்போது விசேட பூஜை வழிபாட்டுடன் தமிழ்மொழியில் வேதபாராயணங்கள் செய்யப்பட்டு முருகப் பெருமான் சிறப்புத் தேரில் வலம் வந்தார்.
நேற்று மாலை 3 மணிக்கு தேர் திருவிழா ஆரம்பமானது. இந்த தேரோட்டத்தின்போது இலங்கையில் முதல் முதலாக வசந்தி கௌதவம் இங்கு ஆடப்பட்டு, வெளிவீதியில் 9 நடனங்கள் ஆடப்பட்டு இரதபவனி இரவு 8 மணிக்கு முடிவுற்றது.
ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு பூஜை வழிபாடு செய்யும் ஒரே ஒரு ஆலயமாக விளங்கும் இந்த கல்லடி திருச்செந்தூர் ஆலயம் மகா துறவி ஓங்காரந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM