(ஆர்.யசி )

இன்னும் ஒருவார காலத்தினுள் தற்போதைய நிர்ணய விலையில் நாடு பூராகவும் அரிசி விற்கப்படும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள அரிசியின் நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலையில் அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட திட்ட அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டார். 

Image result for அரிசி virakesari

வழமையான விளைச்சல் குறைவடைந்து இம்முறை 40 தொடக்கம் 50 வீதமான விளைச்சலே பெறப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாரல் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.