கோட்டா மீண்டும் அரசியலுக்கு வருவதென்பது கேலிக்கூத்தானது - பொதுஜன பெரமுன

13 Sep, 2023 | 09:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது  என்பது கேலிக்கூத்தானது. கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கில்லை. 

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்தவத்தினால் தான் 69 இலட்ச மக்கள் கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆணை வழங்கினார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ அரச அதிகாரியாக சிறந்த முறையில் செயற்பட்டதால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கிறோம்.

69 இலட்ச மக்களாணை அவருக்கு கிடைத்தது என்று குறிப்பிடுவது.தவறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் தான் அவருக்கு 69 இலட்ச மக்கள் ஆணை வழங்கினார்கள்.

69 இலட்ச மக்களாணையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ அரச தலைவராக சிறந்த முறையில் செயற்படவில்லை.

தவறான தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டு இறுதியில் நாட்டில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவதாக ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

69 இலட்ச மக்களின் ஆணையை பெற்று, முறையாக செயற்படாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றவர் மீண்டும் அரசியலுக்கு வருவது என்று குறிப்பிடுவது கேலிக்கூத்தானது. மீண்டும் அரசியலுக்கு வந்த அவர் எதை சாதிக்க போகிறார் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

முழு அரசியல் கட்டமைப்பையும் மக்கள் வெறுக்கும் நிலையை ஏற்படுத்திய கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏதும் முன்னெடுக்கவில்லை. கோட்டபய ராஜபக்ஷவினால் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொண்டு கட்சி என்ற ரீதியில் முன்னேறிச் செல்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29