அடுத்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் போது பிரதான எதிர்கட்சி நிலைத்திருக்காது - ஐ.தே.க.

Published By: Vishnu

13 Sep, 2023 | 09:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடமாகும்போது நிலைத்திருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (13) இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறுமா என சிலர் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதார நிலையில்  எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்தாலும்  மக்களுக்கு தேவையான எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் ஆரம்பாக நாங்கள் பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டு, தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தேடிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எந்தவொரு தேர்தலையும் நடத்த எங்களுக்கு முடியுமாக இருக்கும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் பழைய அரசியல் முறைமையில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றவோ அல்லது தொடர்ந்தும் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லவோ முடியாது. ஜனாதிபதியும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் நாங்கள் புதிதாச சிந்தித்து, சர்வதேசத்துடன் இணங்கிச்செல்ல முடியுமான வகையில் எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-

ஆனால் எதிர்க்கட்சி தொடர்ந்தும் பழைய அரசியல் முறைமைகளையே செயற்படுத்தி வருகிறது. அவர்களின் செயற்பாடுகள் தற்காலிகமானதாகும். எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் நாடு மீண்டும் கஷ்ட நிலைக்கே செல்லும். இவர்களின் இவ்வாறான நடவடிக்கை காரணமாக எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி அடுத்துவரும் தமிழ் சிங்கள புதுவருடமாகும்போது நிலைத்திருக்க முடியுாமல் இல்லாமல் போகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58