(ஆர்.யசி )

வைத்திய  தரம் தொடர்பில் ஆராய வேண்டுமாயின் முதலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரத்தையும், ஏனைய அரச வைத்திய பீடங்களின் தரத்தையும்  ஆராய வேண்டும். வெறுமனே சைட்டம் தனியார் வைத்திய நிறுவனத்தின் தரத்தை மாத்திரம் கேள்விக்கு உட்படுத்தும் தர்க்கம் பொருத்தமற்றதாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. 

சைட்டம் போன்ற தனியார் கல்வி பீடங்களை உருவாக்கியமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செய்த சிறந்த நடவடிக்கையாகும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியார் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் அமுனுகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.