வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை (13) காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்றது.
இன்று காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் காலை 07.15 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 8.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தார்.
இன்றைய தேர்த்திருவிழாவின்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து நாளைய தினம் வியாழக்கிழமை (14) காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நாளைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுவதோடு, மகோற்சவ திருவிழாக்கள் நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM