பத்தனை டெவன் நீர்வீழ்ச்சிக்கு நீர்வழங்கும் கொட்டகலை ஆற்றின் ஊற்றுப்பகுதியில்  இன்று மாலை 3 மணியளவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் மூன்று ஏக்கர்வரையில் நாசமாகியுள்ளது.

கடும் வெப்பமான கால நிலையுடன் கூடிய காற்று வீசுவதனால் குறித்த தீபரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்மைக்காலமாக மலையகப்பகுதியில் காடுகள் தீ பற்றி எரிகின்றதுடன், பாரியவிலான வனப்பகுதிகள் அழிந்தவண்ணம் உள்ளது. மேலும் நீர் நிலைகள் வற்றியுள்ளமையினால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு, வன ஜீவராசிகளின் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.