இன்றைய சூழ்நிலையில் எம்மில் பலரும் நாளாந்தம் கடினமாக உழைத்தும் அதற்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. வாய்ப்புகள் கிடைத்தும் திறமையாக உழைத்தும் எமக்கு கிட்ட வேண்டிய பலன்கள் முழுமையாக கிடைப்பதில்லை.
இது ஏதோ திட்டமிட்டு மற்றவர்களால் செயல்படுத்தப்படும் மறைமுக காரியமல்ல. நாம் வாங்கி வந்த வரம் அதாவது எம்மிடமே தங்கி இருக்கும் அளவற்ற எதிர்நிலை ஆற்றலே இதற்கு காரணம். இதனை எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் மாய தடை என குறிப்பிடுகிறார்கள்.
வெகுஜன மக்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கு தரித்திரம், பீடை என்றும் குறிப்பிடுவதுண்டு. மேலும் இதனை அகற்றுவதற்கும் சில பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
வருவாயில் மட்டுமல்ல திருமண தடை, சரியான தொழில் அமையாமை, தொழிலில் லாபம் இல்லாத நிலை, தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்படும் சூழல், உயர் கல்வியில் தடை, வளர்ச்சியில் தடை என எந்த காரியங்களில் உங்களுக்கு தடை ஏற்பட்டாலும், பின்வரும் எளிய பரிகாரத்தை மேற்கொண்டு உங்களின் மாய தடையை அகற்றிக் கொள்ளலாம்.
பௌர்ணமி நாளை தெரிவு செய்து கொண்டு, பௌர்ணமி திதி இருக்கும் தருணத்தை உறுதி செய்து கொண்டு, ஒரு முழு தேங்காயை வாங்க வேண்டும். அதனை சீர்படுத்தி தண்ணீரால் சுத்தப்படுத்தி அதன் பிறகு அதில் பன்னீர் கலந்த குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும்.
ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட தேங்காயை ஒரு சிவப்பு வண்ண துணியில் கட்டி வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்த துணியில் கட்டப்பட்டிருக்கும் தேங்காயை உங்களது வீட்டின் உள்ள அனைத்து மூலைகளிலும் உள்ள சுவர்களில் தொட்டு, அதன் பிறகு உங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் தனித்தனியாக நிற்க வைத்து அவர்களையும் திருஷ்டி கழிப்பது போல் சுற்றி வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அந்த தேங்காயை அருகில் உள்ள நீர் நிலைக்கு எடுத்துச் சென்று, காலில் காலணி அணியாமல் ஓடும் நீரில் 'ஓம் பகவதே வாசுதேவாயா' என்ற மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே விட்டுவிட வேண்டும்.
இதனை தொடர்ந்து மூன்று பௌர்ணமி நாட்களில் செய்தால் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும், உங்களது வீட்டையும் சுற்றி இருக்கும் மாய தடைகள் முழுமையாக அகலும். அதன் பிறகு குறைவான உழைப்பில் அதாவது புத்திசாலித்தனமான உழைப்பிலேயே நினைத்ததை விட கூடுதலாக சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் பின்பற்றி தனவந்தர் ஆகலாம்.
இதனிடையே இதே தேங்காயை வைத்து வேறு சில ஆன்மீக பெரியோர்கள் முடக்கு தோஷத்தை நீக்கலாம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதன் போது நீங்கள் கேரளாவில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திற்கு சென்று, 'முடக்கு தோஷத்திற்கான வழிபாடு' என்று சொன்னால் கட்டணம் செலுத்திய பிறகு அவர்கள் ஒரு தேங்காயை தருவார்கள். அந்த தேங்காயை கையில் வைத்துக்கொண்டு அந்த ஆலயத்தை வலம் வந்து, குறிப்பிட்ட இடத்தில் சிதறுகாய் அடித்தால் உங்களது முடக்கு தோஷம் நீங்கிவிடும் என்பார்கள்.
வேறு சிலர் இதே தேங்காயை வைத்து அதன் முக்கண், இருக்கண், ஒரு கண் என்ற கண்ணின் எண்ணிக்கையை வைத்து அது அதிர்ஷ்டமான காயா? இல்லையா? என்பதையும் எடுத்துரைப்பர். முடக்கு தோஷத்தை நீக்கவும், அதிர்ஷ்டத்தை வரவழைக்கவும், மாய தடையை அகற்றவும் தேங்காய் எளிய பரிகாரமாக இருக்கிறது என்பதனை உணர்ந்து, தேங்காயை பரிகாரத்திற்காக பயன்படுத்தலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM