இரைப்பை புற்று நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சத்திர சிகிச்சை

13 Sep, 2023 | 12:38 PM
image

உலகளவில் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இரைப்பைப் புற்றுநோயாளிகள் புதிதாக உருவாகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் இரைப்பைப் புற்றுநோயின் முதல் மட்டும் இரண்டாம் நிலையில் இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானித்தால், தற்போது அறிமுகமாகி இருக்கும் மினிமம் அக்ஸஸ் சர்ஜேரி எனப்படும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என மருத்துவர் தெரிவிக்கிறார்கள். மேலும் நோயாளிகள் இது குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.‌

உணவு விழுங்குவதில் சிக்கல் அதாவது திட மற்றும் திரவ உணவுகளை விளங்குவதில் சிக்கல், மேல் வயிற்று வலி, சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கிய உணர்வு, சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு, நெஞ்செரிச்சல், அஜீரணம், குமட்டல், வாந்தி, திடீரென எடை இழப்பு, அதீத சோர்வு, வெளியேறும் மலத்தின் நிறமாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் வயிறு தொடர்பான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். உடனடியாக அருகிலுள்ள இரைப்பை புற்றுநோய் நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

வயிற்றில் உற்பத்தியாகும் செல்களின் அசாதாரண வளர்ச்சியே இரைப்பை புற்று நோயாக மாறுகிறது. சிலருக்கு வயிற்றில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். மருத்துவர்கள் பிரத்தியேக பரிசோதனையின் மூலம் புற்றுநோய் பாதிப்பு வயிற்றில் எந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அதன் பிறகு அதற்குரிய சிகிச்சைகளை தீர்மானிப்பர்.‌ புற்றுநோய் கட்டி சிறிய அளவில் இரைப்பையில் இருந்தால் அதனை நவீன சத்திர சிகிச்சை மூலம் அகற்றி முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

மேலே சொன்ன அறிகுறிகளுடன் நீங்கள் மருத்துவரை சந்தித்தால் அவர் உங்களுக்கு ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன் மற்றும் பெட் ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையில் தங்களுக்குரிய சிகிச்சையை மருத்துவர்கள் தெரிவு செய்வர்.

உங்களுடைய இரைப்பை புற்றுநோய் பாதிப்பு ஒன்று அல்லது இரண்டாம் நிலையில் இருந்தால் சத்திர சிகிச்சைகள் மூலம் கட்டியை அகற்றுவர். இதற்கு தற்போது வயிற்றில் சில இடங்களில் மட்டும் பிரத்யேகமாக துளையிட்டு சத்திர சிகிச்சையை மேற்கொள்வர். அதன் பிறகு கீமோதெரபி, ரேடியேசன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, டார்கெட் தெரபி, இம்யூனோ தெரபி ஆகிய சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை வழங்குவர். சிகிச்சைக்குப் பிறகு மூன்றாண்டு காலம் வரை மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதுடன், அவர்கள் பரிந்துரைக்கும் அறிவுரையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.‌

டொக்டர் ராஜ்குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10
news-image

உர்டிகாரியா பிக்மெண்டோசா எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2023-09-15 17:08:22
news-image

அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய...

2023-09-14 20:58:17
news-image

செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்: ...

2023-09-14 11:53:53
news-image

இரைப்பை புற்று நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2023-09-13 12:38:49
news-image

இரத்த சர்க்கரையின் அளவு தொடக்க நிலையில்...

2023-09-12 14:14:36
news-image

முடக்கு தோஷத்தை முற்றாக நீக்கும் முத்தான...

2023-09-11 16:47:45