தெற்காசியா நாட்டில் உள்ளவர்களில் சர்க்கரை நோயாளிகள் தான் அதிகம். தொடக்கநிலை சர்க்கரை நோயாளிகள்... சர்க்கரை நோயாளிகள்.. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கும் நோயாளிகள்... இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாத நோயாளிகள் .... என நீரிழிவு நோயாளிகளின் பல வகையினர் உள்ளனர்.
உங்களுக்கு ரத்த சர்க்கரையின் அளவு இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான விளிம்பு நிலையில் இருக்கிறது என பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டவர்களின் சதவீதம் பத்திலிருந்து 15 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனால் சர்க்கரை நோயின் பாதிப்பை குறித்து இவர்கள் முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும் என்றும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை உறுதியாக பின்பற்றினால் ஆயுள் முழுவதும் ரத்த சர்க்கரையில் அளவு பாதிக்காத வண்ணம் இவர்களால் ஆரோக்கியமாக வாழ இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் சிலர் நீரழிவு நோய் தான் வரவில்லையே..! அதற்கான தொடக்க அறிகுறிகள் தானே இருக்கிறது. நான் ஏன் அதனை வராமல் தடுப்பதற்கான சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டும்? என கேட்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவர்கள் ஒரே ஒரு விடயத்தை மட்டும் நினைவுபடுத்துகிறார்கள்.
உங்களுடைய இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த சர்க்கரையின் அளவிற்கும் தொடர்பு இருக்கிறது. அதாவது நீங்கள் சர்க்கரை நோயாளிகளாக மாறிவிட்டீர்கள் என்றால்... முதலில் பாதிக்கப்படுவது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் தான். அதனால் தான் நீங்கள் ரத்த சர்க்கரை அளவு விளிம்பு நிலையில் இருக்கும்போதே அதனை குறைத்து.., சர்க்கரை நோயாளிகளாக மாறாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் சர்க்கரையின் அளவு உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த வாழ்க்கை நடைமுறை, உடற்பயிற்சி, உணவு முறை மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதியாக பின்பற்றினால்... ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல்... நீரிழிவு நோயால் பாதிக்கப்படாமல்... உங்கள் உடல் உறுப்புகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல்... உங்களால் மகிழ்ச்சியாக வாழ இயலும்.
மருத்துவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்தால், விளிம்பு நிலை இரத்த சர்க்கரையின் அளவு உள்ளவர்கள்.. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தொடக்க நிலை மற்றும் கட்டுப்பாடற்ற ரத்த சக்கரைப் பாதிப்பிற்கு சென்று விடுவார்கள். இவர்களுக்கு கண், கால், சிறுநீரகம், இதயம், பாதம் போன்ற உறுப்புகளில் பாதிப்பை உணர்வர். மேலும் உடல் இணை நோய்களால் அசௌகரியத்தையும், அசாதாரணமான சூழ்நிலையும் எதிர்கொள்வர்.
இதனால் ரத்த சர்க்கரையின் அளவு விளிம்பு நிலையில் இருக்கும்போதே அதனை அதிகரிக்க விடாமல் தொடர்ச்சியாக மருத்துவர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். மேலும் உங்களது பெற்றோர்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால்.. நீங்கள் 30 வயதிற்குப் பிறகு கட்டாயம் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி உங்களது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
டொக்டர் ராஜேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM