(நெவில் அன்தனி)
மதீஷ பத்திரணவின் முன்னேற்றத்தில் எஸ். தோனியும் சென்னை சுப்பர் கிங்ஸும் பங்காற்றி இருக்கக்கூடும். ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்தான் பத்திரணவை முதன்முதலில் உருவாக்கியது என இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுநர் நவீத் நவாஸ் கூறினார்.
ஆர். பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
19 வயதுக்குட்பட்ட இரண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடியவர் மதீஷ பத்திரண. பாடசாலை கிரக்கெட் விளையாடியபோதே மதீஷ பத்திரணவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இனங்கண்டிருந்தது. அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டத்திலும் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார் என நவீத் நவாஸ் குறிப்பிட்டார்.
'உண்மையில் பத்திரணவுக்கு இளம் வயதில் - 18, 19 வயதுகளில் ஐ பி எல்லில் தோனி போன்ற தலைவரின் கீழ் விளையாட கிடைத்த வாய்ப்பு அவரை ஒரு சிறந்த வீரராக முன்னேறுவதற்கு உதவி இருக்கலாம். எம்.எஸ்.ஸிடமிருந்து அவர் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டிருக்கக்கூடும். அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது, மிக முக்கிய போட்டிகளில் எவ்வாறு திறமையை வெளிப்படுத்துவது என்பதை எல்லாம் சென்னைக்காக விளையாடியபோது அவர் கற்றிருக்கக்கூடும். அது அவருக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
'ஆனால் அதன் மூலம்தான் அவர் முன்னேற்றம் அடைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார் என நான் கூறமாட்டேன். ஏனேனில் அவர் இளம் வயதிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இனங்காணப்பட்டவர். எவ்வாறாயினும் ஐபிஎல்லில் அவர் விளையாடியதால் அவரது முன்னேற்றத்தில் எம். எஸ். தோனிக்கு பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்' என நவீத் நவாஸ் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM