கொழும்பு - நீர்கொழும்பு பிரதானவீதியில் குரண சந்தியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரண சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் கார் ஒன்றின் பற்றரி வெடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.