அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றின் போது நீதிமன்ற உத்தரவை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் கைதுசெய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.