இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10 நிறுவனங்களுள் ஒன்றாக Aitken Spence இடம்பிடிப்பு

12 Sep, 2023 | 10:07 AM
image

AICPA & CIMA மற்றும் ICCSL  (சர்வதேச வர்த்தக சம்மேளனம் இலங்கை) என்பவை இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10 நிறுவனங்களுள் Aitken Spence  இடம்பிடித்துள்ளது.

இலங்கையில் மிகவும் உயர் தராதரங்களைக் கொண்ட நிறுவனங்களும் இந்த மிகச்சிறந்த 10 நிறுவனங்களுள் அடங்குகின்றன.

இம்மாபெரும் நிகழ்வில் கொழும்பின் பெருநிறுவன தலைவர்கள் மற்றும் பல வெளிநாட்டு தூதரகங்களின்  இராஜதந்திரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு இலங்கை ஜனாதிபதியின்  செயலாளரான திரு. சமன் ஏகநாயக்க கலந்துகொண்டார்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்தின் உப தலைவர் திரு. கட்சுகி கொடாரோ இந்நிகழவில் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் சிறப்புரையையும் ஆற்றினார்.

இதற்கான மதிப்பீடுகளில்  CIMA  உறுப்பினர்கள் குழு (CGMAs)செய்த நிதி மதிப்பீடும் உள்ளடங்கியுள்ளது. அதன் பின்னர் KPMG குழு மதிப்பீட்டு புள்ளிகளை அங்கீகரித்து அடுத்த சுற்றுக்காக முதல் 20 நிறுவனங்களை தெரிவு செய்தது.

இரண்டாவது சுற்றின் போது அத்தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் நடுவர் குழாமுக்கு விளக்கக்காட்சி உரையும் நிகழ்த்தப்பட்டது.

இவ்வனைத்து விளக்கக்காட்சி உரைகளிலும் உயர் நிர்வாகத்தினர் கலந்து கொண்டதால் போட்டியின் மிகவும் உற்சாகமான அம்சமாக இது விளங்கியது. நடுவர் குழாமிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டலின் அடிப்படையில் சிறந்த விளக்கக்காட்சி உரைக்காக Aitken Spence பாராட்டைப் பெற்றது. 

திரு. பராக்ரம திசாநாயக்க – உப தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர், Aitken Spence PLC மற்றும் ஸ்டஷானி ஜயவர்தன – சிரேஷ்ட பணிப்பாளர் Aitken Spence PLC  ஆகியோருக்கு அதிமேதகு இலங்கை ஜனாதிபதியின் செயலாளரான திரு. சமன் ஏகநாயக்க, விருதினை கையளிக்கும் போது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்