ரயில் இயந்திர இயக்குநர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை வேளையில் 36 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், பல ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட 36 ரயில் சேவைகள் இவ்வாறு இரத்தாகியுள்ளதுடன் பல ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் ரயில் இயந்திர இயக்குனர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை, நேற்றிரவு ரயில் இயந்திர இயக்குனர்கள் சங்கத்திற்கும் ரயில் முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு ரயில் இயந்திர இயக்குனர்கள் சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடங்களாக தாமதமாகிவரும் தரம் உயர்வை விரைவுபடுத்துமாறும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட வேறு பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM