(ஆர்.சேதுராமன்)
2023 அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவாக் ஜோகோவிச்சும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கொகோ கௌஃப்பும் சம்பியனாகியுள்ளனர்.
நியூ யோர்க்கில் உள்ளூர் நேரப்படி ஞாயிறு இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டெனில் மெத்வதேவை 6-3, 7-6 (7/5), 6-3 விகிதத்தில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் வீரர் வென்றார்.
ஜோகோவிச் வென்ற 4 ஆவது அமெரிக்கச் சம்பியன் பட்டம் இதுவாகும். அத்துடன் இது அவரின் 24 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
ஆண்களில் அதிக கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றவராக ஜோகோவிச் ஏற்கெனவே சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களில் அதிக ஒற்றையர் பட்டங்களை வென்றவர்களில் அவுஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையை ஜோகோவிச் சமப்படுத்தியுள்ளார்.
36 வயதான ஜோகோவிச் அதிக வயதில் அமெரிக்கப் பகிரங்க சம்பியன் பட்டத்தை வென்ற வீரர் ஆவார்.
கொகோ கௌஃப்
சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை 2-6, 6-3இ 6-2 விகிதத்தில் தோற்கடித்து, 19 வயதான அமெரிக்க வீராங்கனை கொகோ கௌஃப் சம்பியனானார். இது அவரின் முதல் கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டமாகும்.
1999 ஆம் ஆண்டு அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 17 வயதில் இப்பட்டத்தை வென்றிருந்தார். அதன் பின்னர் மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற மிக இளம் அமெரிக்க வீராங்கனை கொகோ கௌஃப் ஆவார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா, பில் கிளின்டன் ஆகியோரும் கொகோ கௌஃப்பை பாராட்டியுள்ளனர்.
இப்போட்டிகளில் ஒற்றையர் சம்பியன்களுக்கு தலா 3 மில்லியன் டொலர் ((சுமார் 97 கோடி இலங்கை ரூபா, சுமார் 25 கோடி இந்திய ரூபா)) பணப்பரிசும் 2 ஆம் இடம்பெற்றவர்களுக்கு தலா 1.5 மில்லியன் டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM