காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அப்பாடசாலை ஆசிரியரை பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் மேற்படி ஆசிரியரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நேற்று காலை குறித்த ஆசிரியர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணைகளில்; விடுதலை செய்யப்பட்டார்.