(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்றைய தினம் விராத் கோஹ்லி, கே.எல். ராகுல் ஆகியோர் குவித்த அதிரடி சதங்களும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 233 ஓட்டங்களும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பலமான நிலையில் இட்டுள்ளது.
தனது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களில் இருந்து இருப்பு நாளான (Reserve Day) செவ்வாய்க்கிழமை (11) தொடர்ந்த இந்தியா 50 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 356 ஓட்டங்களைக் குவித்தது. (356 - 2 விக்.)
பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச போட்டி ஒன்றில் இந்தியாவால் பெறப்பட்ட அதிகூடிய இணை மொத்த எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் 2005இல் இந்தியா 9 விக்கெட்களை இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்றைய தினம் கே. எல். ராகுல் 100 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் விராத் கோஹ்லி 84 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்தியாவின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தபோது விராத் கோஹ்லி 94 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 122 ஓட்டங்களுடனும் கே.எல் ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 111 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இதனிடையே விராத் கொஹ்லி தனது 47ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 13000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனைக்கு உரித்தானார். அவருக்கு இந்த இலக்கை அடைவதற்கு 267 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து முன்னைய சாதனையாளராக இருந்தார்.
கே.எல். ராகுல் தனது 6ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 14ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது 2000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
கோஹ்லியும் ராகுலும் பகிர்ந்த பிரிக்கப்படாத 233 ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 3ஆவது விக்கெட்டில் இந்திய ஜோடி பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டமாகும்.
கே. எல். ராகுல், விராத் கோஹ்லி ஆகியோரின் அதிரடிகள் காரணமாக பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ள பாகிஸ்தான் பலத்த சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
பாகிஸ்தான் 20 ஓவர்களில் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறி, மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் இந்தியா வெற்றிபெறுவது நிச்சயம்.
எனவே பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் பலத்த அழுத்தத்தை எதிர்கொள்ளப்போகிறது.
கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மழை பெய்ததால் பிற்பகல் 4.52 மணிக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
ரோஹித் ஷர்மா 56 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 58 ஓட்டங்களையும் பெற்றதுடன் 121 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்திருந்தனர்.
ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது கோஹ்லி 8 ஓட்டங்களுடனும் ராகுல் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
மழை விட்ட பின்னர் போட்டியை அணிக்கு 34 ஓவர்கள் வீதம் இரவு 9.00 மணிக்கு தொடரதிட்டமிடப்பட்டது. ஆனால், இரவு 8.30 மணிக்கு மீண்டும்; கடும் மழை பெய்ததால் இருப்பு நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டம் விடப்பபட்ட இடத்திலிருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு அமைய போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டதால் பிற்பகல் 4.40 மணிக்கே ஆட்டம் தொடர்ந்தது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் வெற்றி இலக்கு குறைந்தபட்ச 20 ஓவர்களில் 187 ஓட்டங்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM