ஹெலோ கோப் வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய இருவருக்கு இன்டர்போல் ஊடான பிடியாணையை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஷ்கி இன்று (09) பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளமையால் குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபாத் கருணாஜீவ மற்றும் இரேஷா சில்வா ஆகிய இருவரே இவ்வாறு வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய ஐவர் சட்ட விரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் பணத்தில் 100 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி "ஹெலோ கோப்" எனும் நிறுவனத்தை கொள்வனவு செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பிலேயே குறித்த இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.