இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு பொறுப்புக்கூறல் மிகவும் அவசியமானது - ஐநா

Published By: Rajeeban

11 Sep, 2023 | 05:30 PM
image

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய கடப்பாடு இலங்கை அதிகாரிகளிற்குள்ளது என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடாநசீவ் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54வது அமர்வு இன்று ஆரம்பமானவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்
தேர்தல்களை நடத்துவதை தாமதிப்பதும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளை மறுசீரமைப்பதும் அரசியலில் பங்கெடுப்பது மற்றும் வாக்காளர்களின் சுதந்திரமான வெளிப்பாடு ஆகியவற்றிற்கான உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது.


அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி கொள்கைகள் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதன் கடப்பாடுகளால் வழிநடத்தப்படவேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைகளை மறுப்பது மக்கள் தங்கள் உண்மையான துயரங்களை வெளிப்படுத்துவதை ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதை  தடுக்கும் இதனால் நாட்டில் மேலும் பதற்றம் உருவாகும்.


உண்மையை கண்டறிவது மாத்திரம் போதுமானதல்ல அதனுடன் பொறுப்புக்கூறலிற்கான தெளிவான அர்ப்பணிப்பும் இணைந்திருக்கவேண்டும்.
சர்வதேச தற்காலிக சிறப்பு நீதிமன்றங்கள் மூலமும்இதனை முன்னெடுக்கவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சுயாதீன வெளிப்படையான ஒரு பின்தொடர்தல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தொடர்ச்சியாக இலங்கைக்கு பரிந்துரை செய்து வந்துள்ளார்.


இதனனை முழுமையான சர்வதேச மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின்  பிரதிநிதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 14:48:56
news-image

பல பெண்களுக்கு வட்ஸ்அப் செயலியினூடாக ஆபாச...

2025-02-19 14:59:22
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-19 14:59:24
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07