புதிய வளாகத்துடன் கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அமானா வங்கி திகழ்கின்றது

11 Sep, 2023 | 04:36 PM
image

கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அமானா வங்கி அண்மையில் தனது கூட்டாண்மை வங்கியியல் அலுவலகத்தை இடமாற்றம் செய்திருந்தது.

புதிய வளாகத்தின் திறப்பு நிகழ்வில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி, முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் தில்ஷான் ஹெட்டியாரச்சி, திஷான் சுபசிங்க மற்றும் மொஹமட் ஆடமலி, வியாபார வங்கியியல் பிரிவின் உப தலைவர் இர்ஷாத் இக்பால், உதவி உப தலைவர் மற்றும் கூட்டாண்மை வங்கிப் பிரிவின் தலைமை அதிகாரி ரஜேந்திர ஜயசிங்க மற்றும் முகாமைத்துவ குழுவின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு 3, காலி வீதியில் அமைந்துள்ள, அமானா வங்கியின் பிரதான கிளையின் 5ஆம் மற்றும் 6ஆம் மாடிகளில் அமைந்துள்ள புதிய கூட்டாண்மை அலுவலகத்தினூடாக ஒப்பற்ற சௌகரியம் மற்றும் செயற்பாடுகள் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், புதிய வளாகத்தில் கொழும்பு 3, காலி வீதியில் அமைந்துள்ள, அமானா வங்கியின் பிரதான கிளையின் 5ஆம் மற்றும் 6ஆம் மாடிகளில் அமைந்துள்ள புதிய கூட்டாண்மை அலுவலகத்தினூடாக ஒப்பற்ற சௌகரியம் மற்றும் செயற்பாடுகள் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், புதிய வளாகத்தில் மாநாட்டு அறைகள் மற்றும் பிரத்தியேக சந்திப்புப் பகுதிகள் போன்றன அமைந்துள்ளதுடன், இரகசியத்தன்மை வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளன. 

சர்வதேச வணிகத்தின் வினைத்திறனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வர்த்தக சேவைகள் அலுவலகமானது, அதே வளாகத்தில் அமையப் பெற்றுள்ளது.

இறக்குமதி/ஏற்றுமதி வர்த்தக நிதி தொடர்பில் செலவிடப்படும் காலம் மற்றும் சௌகரியத்தை மேம்படுத்தும் வகையில் இந்த மூலோபாய திட்டம் அமைந்துள்ளது. 60 க்கும் மேற்பட்ட வங்கி வலையமைப்புகளுடன் கொண்டுள்ள உறுதியான பிரசன்னத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த கட்டமைப்பு அமைந்துள்ளது.  

இந்த இடம்மாற்றம் தொடர்பில் அமானா வங்கியின் வியாபார வங்கியியல் உப தலைவர் இர்ஷாத் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது கூட்டாண்மை வாடிக்கையாளர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். குறிப்பாக, பொருளாதார நெருக்கடி காணப்படும் காலப்பகுதியில், அனைத்து இலங்கையர்களினதும் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கு அவசியமான வகையில், தொடர்ச்சியாக அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கின்றனர். எமது கூட்டாண்மை வாடிக்கையாளர்கள் நாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர். எமது பெறுமதிகளின் பிரகாரம், அவ்வாறான வியாபாரங்களுக்கு சாதாரண நிதிச் சேவைகளை வழங்கும் ஒரு சேவை வழங்குநராக திகழ்வதற்கு அப்பால் சென்று, அவர்களின் கூட்டாண்மை வெற்றிகரமான செயற்பாடுகளில் மூலோபாய பங்காளராக இணைந்திருப்பதற்கு முயற்சிக்கின்றோம். இந்த இடம்மாற்றத்தினூடாக, கூட்டாண்மை வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான அமானா வங்கியின் அர்ப்பணிப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எமது அர்ப்பணிப்பான அனுபவம் வாய்ந்த உறவு பேண் முகாமையாளர்களினூடாக, எமது பெறுமதி வாய்ந்த கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு வளர்ச்சி மற்றும் கைகோர்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவசியமான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.” என்றார்.

வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கூட்டாண்மை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக நாட்டின் முக்கிய பொருளாதாரப் பிரிவுகளான விவசாயம், உற்பத்தி மற்றும் வியாபாரம் போன்ற அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்களிப்பை கொண்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க வலு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளில் அமானா வங்கியும் பங்கேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. வங்கியின் அதிகரித்துச் செல்லும் கூட்டாண்மை வாடிக்கையாளர் பிரிவின் பிரகாரம், நவீன வசதிகள் படைத்த பகுதிக்கு கூட்டாண்மை வங்கியியல் பிரிவின் இடம்மாற்றம் என்பது, எமது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு கவர்ச்சிகரமான தொடர்ச்சியான முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்