இலங்கையில் வங்கிச்சேவை மற்றும் நிதிச் சேவைத் துறையில் முன்னோடியான மக்கள் வங்கி, நாட்டின் டிஜிட்டல் வங்கிச்சேவை மேலாதிக்கத்தை நோக்கிய தனது பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினை எட்டியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.
2023 ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிலவரப்படி, 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கிச்சேவை, மொபைல் வங்கிச்சேவை செயலி மற்றும் Wallet செயலி மூலம் டிஜிட்டல் வங்கிச்சேவைகளை வங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி, அவர்களின் வங்கிச்சேவை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தி, பலதரப்பட்ட புத்தமாக்கமான நிதித் தீர்வுகளுக்கு தங்குதடையற்ற அணுகலை வழங்குகிறது.
“இலங்கையில் வளர்ச்சிகண்டு வருகின்ற டிஜிட்டல் துறை மற்றும் எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப மக்களின் டிஜிட்டல் மயமாக்கல் தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் வங்கி ஒரு முன்னோடி பங்கை வகிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை எட்டியுள்ள எங்கள் அணி, வாடிக்கையாளர்களின் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் அணுகல்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இதனாலேயே எமது பயனர் நட்புக் கொண்ட மற்றும் உள்ளுணர்வு சார்ந்த இணைய வங்கிச்சேவை இயங்குதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் பயனர்கள் மத்தியில் இந்த அளவுக்கு உச்ச மட்டத்தில் பிரபலமடைந்துள்ளன,” என மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்கள் கருத்து தெரிவித்தார்.
வங்கியின் இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை தீர்வுகள் தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
People’s Wave மொபைல் செயலி, People’s Web இணைய வங்கிச்சேவை மற்றும் People’s Pay wallet செயலி தீர்வு ஆகியவை தனிநபர் வாடிக்கையாளர்களின் வங்கிச்சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், People’s Wyn மொபைல் வங்கிச்சேவை தீர்வு மற்றும் People’s Web நிறுவன இணைய வங்கிச்சேவை தீர்வு ஆகியவை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன.
வாடிக்கையாளர் அனுபவத்தையும், சௌகரியத்தையும் மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சேவைகளின் தொகுப்பை உள்ளடக்கிய வகையில் டிஜிட்டல் கணக்கை முழுமையாக திறக்கும் வசதியையும் மக்கள் வங்கி வழங்குகிறது.
People’s Wiz என்பது படிவங்கள் ஏதுமில்லாமல் டிஜிட்டல் கணக்கைத் திறப்பதற்கான தீர்வாகும். இது வாடிக்கையாளர்கள் புகைப்படங்கள் மற்றும் KYC (வாடிக்கையாளர்களின் விபரங்களை அறிந்துகொள்ளும் படிவம்) ஆவணங்களின் பிரதிகளுடன், அளவுக்கதிகமான படிவங்களை நிரப்ப வேண்டிய தேவையைப் போக்கி, வங்கிக் கணக்கைத் திறக்க இடமளிக்கிறது. இந்த முறைமை மக்கள் வங்கியின் டிஜிட்டல் முகவர்கள் வாடிக்கையாளர்களை நேரே சென்று சந்தித்து, டெப்லெட் சாதனத்தின் துணையுடன் கணக்குகளை தங்குதடையின்றி திறக்கவும் இடமளிக்கிறது. மேலும், People’s Pay Merchant Module ஆனது “Lanka QR” பதிவு செயல்முறையை எளிதாக்கி, சிறிய அளவிலான வணிகங்களை டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுகளைப் பின்பற்றுவதற்கு இடமளித்து, ஊக்குவிக்கிறது.
மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்புடன், குறுகிய காலத்திற்குள் 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை எமது டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயத்தின் வெற்றிக்குச் சான்றாகும்.
அவர்களின் விருப்பத்திற்குரிய வங்கிச்சேவைக் கூட்டாளராக மக்கள் வங்கியின் மீது நம்பிக்கை வைத்துள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து உள்வாங்கிக்கொண்டு, மேன்மையுடன் செயற்பட முயற்சிப்பதால், எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புத்தாக்கமான மற்றும் தங்குதடையற்ற வங்கிச்சேவை அனுபவத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் வங்கி உறுதிபூண்டுள்ளது.
எமது டிஜிட்டல் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கூடுதல் வழிமுறைகளை ஆராய்வதற்கும் நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது, ரூபா 3.0 டிரில்லியனுக்கு கிட்டிய ஒருங்கிணைந்த சொத்துக்களுடன் நாட்டின் இரண்டாவது பெரிய நிதிச் சேவை வழங்குனராகும். தற்போது, வங்கிக்கு நாடளாவிய ரீதியில் 747 கிளைகள் மற்றும் சேவை மையங்கள் உள்ளன மற்றும் 14.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. மக்கள் வங்கியில் ATM மையங்கள், CDM மையங்கள் மற்றும் CRM உள்ளடங்கிய 290 விசேட வங்கிச்சேவைப் பிரிவுகள் (SBU) உள்ளதுடன், வாடிக்கையாளர்கள் வருடத்தில் 24 மணி நேரமும் தங்கள் வசதிக்கேற்ப வங்கிச்சேவைகளை முன்னெடுக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM