(இராஜதுரை ஹஷான்)
அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதியுதவியின் பயன் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை.
நாட்டுக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் அரசாங்கத்தின் ஊழல் நிர்வாகம் தொடர்பில் பல விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துரைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதியுதவியின் பயன் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் அரசாங்கத்தின் ஊழல் நிர்வாகம் தொடர்பில் பல விடயங்களை ஆதாரபூர்வமாக எடுத்துரைப்போம்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கை இதற்கு முன்னர் 16 தடவைகள் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த முறை வங்குரோத்து நிலையடைந்ததன் பின்னர் நீடிக்கப்பட்ட ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையவுமில்லை.
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட நாடுகள் தமது அரச நிர்வாகத்தில் புரையோடிப் போயிருந்த ஊழலை இல்லாதொழித்து பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தன. ஊழலை ஒழிக்காத எந்த நாடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை.
வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இலங்கையில் ஊழல் இல்லாதொழிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளை செயற்படுத்தவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த விவாதத்தின் போது மருந்து கொள்வனவில் இடம்பெறும் மோசடி தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தினார்கள்.
ஆகவே இந்த விவாத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் மொழி பெயர்ப்புடன் சமர்ப்பிப்போம்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிவாரணம் வழங்கவில்லை.கடனுதவி வழங்கியுள்ளது.இந்த கடனுக்கு அடுத்த ஆண்டு ஆட்சிக்கு வரும் புதிய அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடனுதவியின் பயன் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை.
ஆகவே கடன் ஒத்துழைப்புக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நாட்டு மக்களுக்காக மீள்பரிசீலனை செய்யுமாறு பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM