கோயில் பூசாரி போல் நடித்து கையடக்கதொலைபேசிகளை திருடும் தந்தையையும் மகனையும் 14 நாள் விளக்கமறியில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பெண்ணொருவரிடமிருந்து பெறுமதியான சம்சுங் ரக கையடக்கதொலைபேசியை திருடியவேளையில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த தந்தையும் மகனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவ்வாறு வேடமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களெனவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தெரிவித்தார்.