முடக்கு தோஷத்தை முற்றாக நீக்கும் முத்தான மூன்று இலைகள்

11 Sep, 2023 | 04:47 PM
image

இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் எம்மில் பலரும் தங்களின் வெற்றிக்காக கடும் பிரயத்தனம் செய்யவேண்டியதிருக்கிறது.

கடும் முயற்சிகளை மேற்கொண்டாலும் வெற்றியைப் பறிக்கும் இறுதிக்கட்டத்தில் ஏதேனும் ஒரு ரூபத்தில் அந்த வெற்றி கிடைக்காமல் தவறுகிறது. இதற்கு எம்முடன் இருக்கும் சிலரின் கண்ணேறு மற்றும் முடக்கு தோஷமே காரணம். 

உடனே எம்மில் சிலர் முடக்கு தோஷமா? அது என்ன? என கேட்க தயாராக இருப்பர். வேறு சிலரோ தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்காதீர்கள். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று தர்க்க ரீதியாக வாதிட்டு, முடக்கு தோஷத்தை ஒப்புக்கொள்ள மறுப்பர். நாம் நாளாந்தம் எம்முடைய இல்லத்திலிருந்து புறப்பட்டு வெளியே சென்றால் பலவகையான மனிதர்கள், பல வகையான வெளிப்புற சூழல்கள், ஆகியவற்றை தெரிந்தும் தெரியாமலும் எதிர்கொள்கிறோம். இவற்றின் மூலம் எம்மையும் அறியாமல் எமக்கு தோஷம் ஏற்படுகிறது. அந்த தோஷம் எம்முடைய செயலை  எம்முடைய இலக்கை  திசை திருப்பி முடக்கி விடுகிறது. 

பஞ்ச பட்சி தோஷம், நவக்கிரக தோஷம் என நாளாந்தம் எமக்கு தோஷங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்காகத்தான் எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் வெளியில் இருந்து வீட்டுக்குள் செல்லும் முன், வாசலில் துளசி இலைகள் போடப்பட்ட ஒரு செம்பில் இருக்கும் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு செல்வர். இதன் மூலம் நீங்கள் வெளியில் இருந்து அழைத்து வந்திருக்கும் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து வாசலிலேயே அழித்துவிடும். ஆனால் நாம் இதனை மூட நம்பிக்கை என காரணத்தை கற்பித்து, விலக்கி வைத்து விட்டோம் அல்லது தொடர்ந்து பின்பற்ற மறந்து விட்டோம். 

துளசி இலை எம்முடைய எதிர்மறை ஆற்றலை மட்டும் அகற்றுவதில்லை முடக்கு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனையும் அகற்றுவதற்கு வல்லமை படைத்தவை தான் துளசி. சோதிடர்கள் நீங்கள் முடக்கு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என குறிப்பிட்டால் உடனே நீங்கள் துளசி செடியை வீட்டில் வளர்க்கலாம். துளசி தீர்த்தத்தை நாளாந்தம் பருகலாம். துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனை நீங்கள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க உங்களது முடக்கு தோஷம் தூள் தூளாகி வெற்றி சாத்தியப்படுவதை அனுபவத்தில் உணரலாம். ஏனெனில் துளசி ஆன்மீக, மருத்துவ குணம் மட்டும் கொண்டதல்ல. நவகிரகங்களில் புதனின் காரகத்துவத்தையும், ஆதிக்கத்தையும் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.‌

உடனே எம்மில் சிலர் நாங்கள் தீவிர சைவர்கள். சிவபெருமானை மட்டுமே வணங்குபவர்கள் அல்லது எங்களுடைய பகுதியில் துளசி கிடைப்பதில்லை. நாங்கள் என்ன செய்வது? என கேட்பர். கவலையை விடுங்கள். துளசி இல்லை என்றால் வில்வ இலையையும் பயன்படுத்தலாம். ஏனென்றால் வில்வத்திற்கும் முடக்கு தோஷத்தை முற்றாகத் துடைத்தெறியும் ஆற்றல் உண்டு. 

மேலும் சிலர் துளசி, வில்வம் இவ்விரண்டும் சுவையும் எம்முடைய பிள்ளைகளுக்கு பிடிக்காது. அவர்களுக்கு மாற்று உபாயம் ஏதேனும் இருக்கிறதா? என சில பெற்றோர்கள் கேட்பர். இருக்கிறது. சந்தையில் கிடைக்கும் முடக்கத்தான் கீரையை வாங்கி, சமையலுக்கு பயன்படுத்தி, அந்த கீரையை உணவாக வழங்கினால் உங்களுடைய பிள்ளைகளின் முடக்கு தோஷம் நீங்கும். அவர்கள் கல்வியிலும்  சிறப்பாக செயல்படுவர்.

முடக்கு தோஷம் உள்ளவர்கள் அனைவரும் அமாவாசை திகதியன்று முடக்கத்தான் கீரையை வாங்கி சமையல் செய்து சாப்பிட்டாலும் முடக்கு தோஷம் நீங்கி, உற்சாகம் பிறக்கும். எமக்கு முடக்கு தோஷம் ஏற்பட்டு விட்டது அதனால் அந்த தோஷம் நீங்கும் காலகட்டம் வரை எந்த முயற்சியிலும் ஈடுபட மாட்டேன் என வெற்றிக்காக காத்திருக்காதீர்கள். துளசி, வில்வம், முடக்கத்தான் கீரை ஆகிய மூன்றையும் பயன்படுத்தி முடக்கு தோஷத்தை முடக்கி, வெற்றியை நோக்கி பயணம் செய்யுங்கள். 

தகவல் :மாயன் செந்தில்குமார் தொகுப்பு :சுபயோக தாசன்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10
news-image

உர்டிகாரியா பிக்மெண்டோசா எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2023-09-15 17:08:22
news-image

அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய...

2023-09-14 20:58:17
news-image

செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்: ...

2023-09-14 11:53:53
news-image

இரைப்பை புற்று நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2023-09-13 12:38:49
news-image

இரத்த சர்க்கரையின் அளவு தொடக்க நிலையில்...

2023-09-12 14:14:36