ரத்மலானை பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 810 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பல பொருட்கள் பொலிஸாரார் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.