ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும், வயது வித்தியாசம் இன்றி ஆண் பெண் என இரு பாலினத்தவருக்கும் கான்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் கண் இமை படல அழற்சி பாதிப்பு ஏற்படுகிறது.
கண்ணின் வெண்மை நிறப் பகுதி மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுக்களுக்குள் ஏற்படும் அழற்சியாகும். சில பிள்ளைகளுக்கு இது தொற்று நோயாகவும் இருக்கக்கூடும்.
அத்தகைய தருணங்களில் இந்த பாதிப்பு ஒருவரிடருந்து மற்றவருக்கு எளிதாக பரவும். இதற்கு சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட கண்ணின் வெள்ளை பகுதி இளஞ்சிவப்பாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ மாறி இருத்தல், ஒரு கண் அல்லது இரண்டு கண்ணிலிருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருப்பது, பாதிக்கப்பட்ட கண்களில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படுவது, இமையிணைப் படலத்தில் அதாவது கான்ஜுன்டீவா எனும் பகுதியில் ஏற்படும் வீக்கம், காலையில் கண்விழித்தவுடன் கண் இமைகளில் ஏதோ பசை போன்ற பொருள் ஒட்டி இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு கண் இமை படல அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களாலும், மாசுபட்ட அழகு சாதன பொருட்களை பாவிப்பதாலும், அணிந்து கொண்டிருக்கும் காண்டாக்ட் லென்ஸ் போன்றவற்றை சுத்திகரிக்காமல் தொடர்ந்து பயன்படுத்துவதாலும், சுற்றுப்புற சூழல் மாசுபாட்டின் காரணமாகவும், சிலருக்கு ஒவ்வாமையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்புகள் மூன்று வாரங்களுக்குள் தானாக சரியாகிவிடும். அதற்கு மேலும் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். மருத்துவர்கள் முறையாக பரிசோதித்து அவை குறிப்பிட்ட பிரத்தியேக வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டிருந்தால் அதற்கு சொட்டு மருந்தினை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைப்பர். மேலும் நீங்கள் அத்தகைய தருணங்களில் காண்டாக்ட் லென்ஸ் அணிவதையும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைப்பர்.
இத்தகைய பாதிப்பால் வெகு சிலருக்கு மட்டுமே மிக அரிதாக பார்வை திறனை பாதிக்கிறது. அதே தருணத்தில் ஹெர்பஸ் சிம்பிளக்ஸ் எனும் வைரசால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு மருத்துவர்கள் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் அளிப்பர்.
டொக்டர் அசோக் நாராயணன்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM