யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இவ் வருடத்துக்குள் சகல உரிமைகளையும் வழங்குவதோடு இராணுவத்தினரின் கட்டுபாட்டில் இருக்கும் சகல காணிகளையும் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று காலை விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருட இறுதிக்குள் யுதத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும்.   ஏனைய சமூகத்துக்கு நிகரான வாழ்க்கையை ஏற்படுத்துவோம்.

இந்த புதிய வருடத்தில் அரசியல் ரீதியாக பல மாற்றங்களை முன்னெடுப்போம். குறிப்பாக தற்போது உள்ள அரசியலமைப்பை மாற்றி புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவோம்.

மேலும் நாட்டில்  காணப்படும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முன்முரமாக செயற்படுவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே நிறைவடைந்

துள்ள நிலையில் எதிரணியினர் எமக்கெதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இதற்காக நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை தடை செய்ய முடியாது. எம்மை விமர்சிக்கும் சிலர் எதிர்காலத்தில் எம்மோடு இணைந்து கொள்வார்கள் என்பது உறுதியாகும் என்றார்.