குவைத்தில் வேலை இன்றி சிக்கி தவித்த மூன்று பிள்ளைகளின் தாய் நாடு திரும்பிய நிலையில், எவ்வித பாதுகாப்பும் இன்றி இருந்த பிள்ளைகளுடன் இணைந்தார்.
குவைத்தில் இருந்து தாய் நாடு திரும்புவதற்கு உதவுமாறு மூன்று குழந்தைகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 24 மணித்தியாலத்திற்குள் குறித்த தாய் தனது பிள்ளைகளுடன் மீண்டும் இணைவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற வசனா பெர்னாண்டோ என்ற தாய்க்கு வேலை வழங்க மறுத்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் அறையில் தங்க விடப்பட்டிருந்தார்.
அவர் தனது மூன்று குழந்தைகளை தனது தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற நிலையில், தாய் புற்றுநோயால் இறந்துள்ளார்.
இந்நிலையில், 15 வயது மகன், ஏழு வயது மகள் மற்றும் 5 வயது மகன் ஆகியோர் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பாழடைந்த குடிசையில் வசித்து வந்துள்ளனர்.
இவர்களது கோரிக்கை தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார, அவர் நாடு திரும்புவதற்கு இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தனது இக்கட்டான நிலையை எடுத்துரைத்த ஊடகங்களுக்கும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததற்கும் வாசனா தனது நன்றியைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM