"லிபேரா ஜூனியர்" பிரமாண்டமான வெளியீட்டு விழா

11 Sep, 2023 | 11:20 AM
image

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான லிபேரா (Libera), அதன் சிறுவர்களுக்கான புதிய ஆடை வரிசையான  "லிபேரா ஜூனியர்" (Libera Jr)  எனும் அற்புதமான  தயாரிப்பை  பெருமையுடன் களமிறக்கியுள்ளது.  சிறுவர்களுக்கான இந்த ஆடை வரிசையை அறிமுகப்படுத்தும்  பிரமாண்டமான அறிமுக வைபவம்  கொழும்பு கலதாரி ஹோட்டலில் உள்ள Grand Ballroom இல் இடம்பெற்றது.

“லிபேரா ஜூனியர்"  சிறுவர்களுக்கு சொகுசையும், வசதியையும் புத்தம் புதிய பாணியில் (ஸ்டைல்) வழங்கும் அற்புதமான தயாரிப்பாகும். 100% இயற்கையான பொருட்களால் உருவாக்கப்பட்ட “லிபேரா ஜூனியர்” ஆடை வரிசை  சிறுவர்களுக்கு நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான,  நேர்த்தியான, நவநாகரிக தோற்றத்தை முற்று முழுதாக வழங்குகிறது.  

லிபேரா ஜூனியரின் களமிறக்க  நிகழ்வில் மிகுந்த  உற்சாகத்துடன்  உரையாற்றிய  லிபேரா நிறுவனத்தின்  பிரதம  நிறைவேற்று  அதிகாரியான   முராத் ரஹிம்டீன் கூறியதாவது,  “எங்கள் குழு சிறுவர்களுக்கான  இந்த அற்புதமான ஆடை வரிசையை வடியவமைக்கும்  பணியில்  அயராது உழைத்துள்ளது.  இந்த ஆடை வரிசை சிறுவர்களுக்கு மிகவும்  வசதியான, சொகுசான  உணர்வை  வழங்குவதுடன்  அனைவரினதும்  பார்வையை  ஈர்க்கும்  வகையில்  புத்தம் புது  பாணியில் தயாரிக்கப்படுகிறது.   இந்த  நிகழ்வில்  காட்சிப்படுத்தப்பட்ட  ஒவ்வொரு  ஆடையிலும்  எங்கள்  குழுவின்  அற்புதமான படைப்பாற்றல் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது"  

இந்த பிரமாண்டமான களமிறக்க நிகழ்வு லிபேரா ஜூனியரின் வரிசையை அறிவிப்பதற்கான ஒரு தளமாக மட்டுமல்லாமல், சிறுவர்களுக்கான கண்கவர் ஆடைகளின் பிரமாண்டமான   காட்சியகமாகவும்  அமைந்திருந்தது.    திறமையான குழந்தை மொடல்கள்  மற்றும் நேரடி நிகழ்ச்சி கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில்   குதூகலமும் கோலாகலமும்  கரை புரண்டு ஓடியதைக் காணக்கூடியதாக  இருந்தது. 

லிபேரா பற்றி:

லிபேரா என்பது   நூறு  சத விகிதம்    இயற்கைப் பொருட்களைக்  கொண்டு தயாரிக்கப்பட்ட,  நவநாகரிக   ஆண்கள் ஆடை டிசைன்களுக்கு   பெயர் பெற்ற  ஒரு ஆற்றல்  வாய்ந்த  வர்த்தக நாமமாகும் . புதிய லிபேரா ஜூனியர் வரிசையானது சிறுவர்களுக்கு வசதியையும், சொகுசையும்  வழங்கி  அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன், அவர்களின்  விளையாட்டு மனப்பான்மையை  ஊக்குவிக்கவும் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாகவும், நவநாகரிக பாணியிலும்  தோற்றமளிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது  என  லிபேரா  ஆணித்தரமாக நம்புகிறது .

லிபேரா மற்றும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட லிபேரா ஜூனியர் வரிசை பற்றிய   மேலதிகத்   தகவல்களுக்கு எமது  [www.libera.lk] வலைத்தளத்தைப் பார்வையிடவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்