இந்திய ஆரம்ப வீரர்களின் அதிரடியைத் தொடர்ந்து கடும் மழை ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது இந்தியா 127 - 2 விக்.

10 Sep, 2023 | 07:59 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பில் திடீரென பெய்த காற்றுடன்கூடிய கடும் மழை காரணமாக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 4.52 மணியளவில் ஆட்டம் இடைநிறுதப்பட்டபோது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இன்றைய தினம் இப் போட்டி தொடராமல் விட்டால் இருப்பு நாளான திங்கட்கிழமை போட்டி நிறுத்தப்பட்ட ஓவரிலிருந்து தொடரும்.

எவ்வாறாயினும் மாலை 6.22 மணிக்குப் பின்னர் போட்டி தொடருமேயானால் ஓவர்கள் குறைக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது (மாலை 6.30 மணி) மைதானத்தை மூடியிருந்து விரிப்வுகள் அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, எதிரணியினரின் மோசமான களத்தடுப்பை பயன்படுத்தி பலமான நிலையை அடைந்தது.

தனது 2 பிடிகள் தவறவிடப்பட்டதை சாதகமாக்கிக் கொண்ட ஷுப்மான் கில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் ரோஹித் ஷர்மாவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

இரண்டாவது ஓவரின் முதலாவது பந்தில் ஷுப்மான் கில்லின் கடினமான பிடியை ஷஹீன் ஷா அப்றிடி எடுக்கத் தவறினார்.

8ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் ஷப்மானினால் கொடுக்கப்பட்ட பிடியை விக்கெட் காப்பாளரும் இரண்டு ஸ்லிப் நிலை வீரர்களும் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க பந்து பவுண்டறியை நோக்கிச் சென்றது.

இவற்றை சாதகமாக்கிக்கொண்ட கில், ரோஹித் ஷர்மாவுடன் ஆரம்ப விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரோஹித் ஷர்மா 56 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

49 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா 6 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினார்.

ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 2 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷுப்மான் கில்லும் ஆட்டம் இழந்தார்.

ஷுப்மான் கில் 52 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டம் இடைநிறுத்தப்பட்டபோது விராத் கோஹ்லி 8 ஓட்டங்களுடனும் கே. எல். ராகுல் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57