உண்மையை கண்டறிதல் வேண்டும்

Published By: Vishnu

10 Sep, 2023 | 06:01 PM
image

எம்.எஸ்.தீன் 

இலங்­கையில் நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பல்­வேறு வகை­யான நெருக்கடிகளை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அதன் பாதிப்­பி­லி­ருந்து இன்னும் முஸ்லிம் சமூகம் முழு­மை­யாக விடு­த­லை­யா­க­வில்லை. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பலர் இன்­னமும் சிறையில் வாடு­கின்­றார்கள். வழக்­கு­க­ளோடும் பலர் நீதி­மன்­றங்­களின் படி­களில் ஏறி இறங்கிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

இத்­தாக்­கு­தல்­களை முஸ்லிம் குழு­வொன்று மேற்­கொண்­ட­த­னால்தான் முஸ்­லிம்­களின் மீதும், அவர்­களின் சொத்­துக்­களின் மீதும், உயிர்­களின் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. முஸ்லிம் சமூ­கத்தை தேசத் துரோ­கிகள் போன்று சித்­த­ரித்­தார்கள். ஆயினும் தாக்­கு­தல்­களின் நோக்­கத்தை உட­ன­டி­யாக புரிந்து கொள்ள முடி­ய­வில்லை.

இத்­தாக்­கு­தல்கள் ஜனா­தி­பதித் தேர்தல் வெற்­றிக்­கா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டது என்று பல­ராலும் குற்­றச்­சாட்­டுக்கள் வைக்­கப்­பட்­டன. ஆனால் அதற்­கான எந்­த­வொரு ஆதா­ரங்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை. அதனால், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்­த­ குற்­றச்­சாட்­டுக்கள் வெறும் பேச்­சுக்­க­ளா­கவே இருந்­தன.

ராஜ­பக்ஷர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்ட போதெல்லாம் அதனை அர­சாங்­கமும், ராஜ­பக்ஷர்களும், அவர்­களின் அர­சியல் அரிச்­சு­வ­டியை பின்­பற்­று­வோரும் மறுத்துக் கொண்டே வந்­தனர்.

இருப்­பினும் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­களை அடை­யாளம் காட்டும் விசா­ர­ணை­களில் தேக்­க­நி­லையே தொடர்ந்து கொண்­டி­ருந்­தது.

இத­னி­டையே இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­வர்­களை அடை­யாளம் கண்டு சட்­டத்தின் முன் நிறுத்த வேண்­டு­மென்று கர்த்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கிறார். முஸ்­லிம்கள் தரப்­பிலும் இத்­த­கைய கோரிக்­கைகள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், அர­சாங்கம் இக்­கோ­ரிக்­கை­களை காதில் போட்டுக் கொள்­ள­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் பற்­றிய சூடும் தணிந்து கொண்­டி­ருந்­தது.

இப்­போது இரா­ஜாங்க அமைச்சர் சிவ­நே­சத்­துரை சந்­தி­ரக்­காந்­தனின் (பிள்­ளையான்) நெருங்­கிய சக­பா­டி­யா­கவும், அவரின் முக்­கிய பொறுப்­புக்­களை வகித்­த­வ­ரு­மான ஹன்சிர் அஸாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து திடுக்­கிடும் தக­வல்­களை சனல் 4 ஊடாக வெளி­யிட்­டுள்ளார். இதனால், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் பற்­றிய பேச்­சுக்கள் மீண்டும் சூடு பிடித்­துள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்­களின் பெயர்­க­ளையும், அது திட்­ட­மி­டப்­பட்­டதன் நோக்­கத்­தையும் சில ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் தெரி­வித்­துள்ளார். இவ­ரது குற்­றச்­சாட்­டுக்­களில் புதி­தாக எத­னையும் குறிப்­பிட்­ட­வில்லை.

இத்­தாக்­கு­தல்கள் குறித்து ஏற்­கெ­னவே உள்ள சந்­தே­கங்­க­ளையே இவரும் வெளி­யிட்­டுள்ளார்.

அத்­தோடு இத்­தாக்­கு­தல்களில் தொடர்புபட்டுள்ளோர் குறித்தும் தனக்கு உள்ள தொடர்­புகள் பற்­றியும் அவர் தெரி­வித்­துள்ளார். ஆகவே முதற் தட­வை­யாக,  தாக்­கு­தல்­க­ளுடன் இவர்­க­ளுக்கு சம்­பந்தம் உள்­ள­தென்று பெயர் குறிப்­பிட்டுக் கூறி­யுள்ளார்.

இவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட்­டுள்ள நிலையில் ஒரு சிலர் இது பற்­றிய விமர்­ச­னங்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் விமர்­ச­னங்கள் பக்கச் சார்­பு­டை­ய­தா­கவும் அமைந்­துள்­ளன. ஒரு சிலர் இந்த தாக்­கு­தல்­க­ளுடன் ராஜபக்  ஷர்­க­ளுக்கு தொடர்­புள்­ள­தென்று வலுப்­ப­டுத்த முனை­வ­தையும், இன்னும் ஒரு சிலர் இவை பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் என்றும் அர­சியல் தேவைக்­காக முன் வைக்­கப்­ப­டு­கின்­றன என்றும் ராஜபக்ஷர்­க­ளுக்கு  எந்­த­வொரு சம்­பந்­த­மு­மில்லை என்றும் கூறி வரு­கின்­றனர்.

அசாத் மௌலா­னாவின் குற்­றச்­சாட்­டுக்­களை எடுத்­த­வு­ட­னேயே ஏற்றுக் கொள்­வதும், நிரா­க­ரிப்­பதும் உண்­மையை மறைப்­ப­தற்கு துணை செய்­வ­தா­கவே அமையும். அவ­ரினால் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்து விசா­ரணை செய்ய வேண்டும். ஏற்­க­னவே நடை­பெற்ற விசா­ர­ணைகள் கிடப்பில் உள்­ளன. ஆதலால், முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்­வதே இப்­போ­தைய தேவை­யாகும்.

இந்த நாட்டில் பல அர­சியல் படு­கொ­லை­களும், மனித உரிமை மீறல்­களும் இடம்­பெற்­றுள்­ளன. அவை பற்­றிய விசா­ர­ணைகள் நீண்ட கால­மாக நடை­பெற்­றுள்­ளன.

ஆனால், உண்­மைகள் வெளி­யா­க­வில்லை. இவர்­கள்தான் கொலை­யா­ளிகள் என்று அடை­யாளங் காட்­டப்­ப­ட­வில்லை. அந்தப் பட்­டி­யலில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களும் அமைந்து விடக் கூடாது.

இத்­தாக்­கு­தல்­களில் வெளி­நாட்டு பிர­ஜைகள் உட்­பட சுமார் 250 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இத்­தாக்­கு­தல்கள் விவ­கா­ரத்தில் பாது­காப்பு தரப்­பினர் அச­மந்­த­மாக செயற்­பட்­டுள்­ளார்கள். இத்­த­கை­ய­தொரு தாக்­கு­தல்கள் நடை­பெ­ற­வுள்­ள­தென்று இந்­திய புல­னாய்­வுத்­துறை இலங்­கைக்கு அறி­வித்த போதிலும் பாது­காப்பு தரப்­பினர் அதனை தடுப்­ப­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களைச் செய்­ய­வில்லை. அசட்­டை­யாக நடந்து கொண்­டார்கள். ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகளில் காணப்படும்  மந்­த­நி­லை , யார் சூத்­தி­ர­தாரி என்­பதை கண்டு பிடிக்­காமை போன்­றன பல்­வேறு சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

ஆதலால், அஸாத் மௌலா­னாவின் தக­வல்கள் குறித்து உட­னடி விசா­ர­ணைகள் நடை­பெற வேண்டும். அதற்­கு­ரிய ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன என்று காலத்தை கடத்தும் யுக்­தியை அர­சாங்கம் கைவிட வேண்டும்.

இத்­த­கை­ய­தொரு தாக்­குதல் நடை­பெ­ற­வுள்­ள­தென்று முன் கூட்­டியே தெரிந்து கொண்­டி­ருந்த அஸாத் மௌலானா அது பற்றி ஜம்­மிய்­யத்துல் உலமா சபை­யி­ட­மா­வது தெரி­வித்­தி­ருக்க வேண்டும். தாக்­கு­தல்­களை தடுத்­தி­ருக்க முடியும். ஆதலால், முஸ்லிம் சமூ­கத்தின் முதல் துரோகி அஸாத் மௌலானா என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஸரப் முது­நபீன் தெரி­வித்­துள்ளார். அப்­ப­டி­யாக இருந்தால் அஸாத் மௌலா­னாவின் தக­வல்­களை ஒரு வகையில் ஏற்றுக் கொள்­வ­தா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது.

உண்­மையை வெளி­யிட்­டி­ருந்தால் தாக்­கு­தலை தடுத்து இருக்­கலாம் என்­பதே அவரின் கருத்­துக்கள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. ஆதலால் அவர் அஸாத் மௌலா­னாவின் கருத்­துக்­களை மறை­மு­க­மாக ஏற்றுக் கொள்­கின்றார் எனலாம்.

மறு­பு­றத்தில் தாக்­கு­தல்கள் நடை­பெ­ற­வுள்­ள­தென்று இந்­தியப் புல­னாய்வுத் துறை இலங்­கைக்கு தக­வல்­களை தெரி­வித்த போதிலும் அதனை கவ­னத்திற் கொள்­ள­வில்லை என்­ப­தையும் நினை­வு­ப­டுத்த வேண்டும்.

ஆகவே, அஸாத் மௌலா­னாவின் கருத்­துக்­களை முற்­றாக நிரா­க­ரிக்­காது அவை பற்றி விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பதே உண்­மையை கண்­ட­றி­வ­தற்­கு­ரிய வழி­யாகும்.

இத­னி­டையே அஸாத் மௌலா­னாவின் தக­வல்­களின் பின்னர் ஆளும் தரப்­பி­ன­ரி­டையே கருத்து முரண்­பா­டு­களும் ஏற்­பட்­டுள்­ளன.

அவர்­க­ளி­டையே இத்­த­க­வல்கள் கலக்த்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவே  இருக்­கின்­றது. அஸாத் மௌலா­னாவின் தக­வல்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடை­பெற வேண்­டு­மென்றும், அதற்கு சர்­வ­தேச குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்­டு­மென்றும் கருத்­துக்கள் சூடு­ப­றந்து கொண்­டி­ருக்­கையில், அமைச்­சர்கள் மனுஷ நாண­யக்­கார, பந்­துல குண­வர்­தன ஆகியோர் முரண்­பட்ட கருத்­துக்­களை ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்­ளனர்.

சனல் 4 வெளி­யிட்­டுள்ள காணொளி தொடர்பில் சர்­வ­தேச மட்­டத்தில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் இக்­கா­ணொளி தொடர்பில் கவனம் செலுத்­தினோம். எதிர்­வரும் நாட்­களில் பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழு ஊடாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள தீர்­மா­னித்­துள்ளோம் என்று அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் பந்­துல குண­வர்­தன சனல் 4 காணொளி குறித்து அமைச்­ச­ர­வையில் ஆரா­ய­வில்லை என்று தெரி­வித்­துள்ளார். அர­சாங்­கத்தின் அமைச்­சர்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள இந்த முரண்­பா­டுகள் கூட அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­தா­கவே இருக்­கின்­றன.

மறு­பு­றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் பற்­றிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ, இரா­ஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ஆகியோர் மறுத்துள்ளனர்.

ஆகவே, சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச குழுவொன்றை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே சனல் 4 இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வெளியிட்ட காணொளி இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்துள்ளது.

ஆதலால், அஸாத் மௌலானாவினதும், இன்னும் இரண்டு அதிகாரிகளினதும் தகவல்களை உள்ளடக்கிய காணொளியின் எதிர்விளைவுகளை மனதில் கொண்டு உண்மையை அறிந்து கொள்வதற்குரிய பூரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நலனின் மீதான தீர்மானமாகவும் இருக்கும் என்பதைப் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனிநபர்களை காப்பாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது நாட்டைக் காப்பாற்றும் நடவடிக்கையே அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆர்க்டிக் மீதான அதிகாரப் போட்டி :...

2026-01-20 14:39:35
news-image

கறுப்பு ஜனவரி'யில் இனியும் இருள் சூழாதிருக்க

2026-01-20 09:11:57
news-image

அநுர குமாரவின் வடக்கு விஜயம் சொல்லும்...

2026-01-20 09:14:02
news-image

இலங்கைக்கு  அமெரிக்கா மேலதிக 25 வீத ...

2026-01-19 11:23:51
news-image

மலையக சமூகத்தை அந்நியப்படுத்தும் சொல்லாடல்களுக்கு முற்றுப்புள்ளி...

2026-01-19 11:01:00
news-image

எதிர்மறையை சாதகமாக்கிய ஜூலி சங்

2026-01-18 05:55:10
news-image

வெறுங்கையுடன் வந்த வாங் யி

2026-01-18 05:47:45
news-image

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

2026-01-18 05:42:29
news-image

அர­சி­யல்­வா­திகள் பொய்­க்கூ­று­வதை சட்­ட­வி­ரோ­த­மாக்கும் முயற்­சியில் வேல்ஸ்

2026-01-18 05:39:45
news-image

சுவிசில் பெருந் துயராக மாறிய புத்தாண்டுக்...

2026-01-18 05:33:08
news-image

ஆய்வுக்கு உட்­ப­டுத்த வேண்­டிய அனர்த்த வரை­ப­டங்கள்

2026-01-18 05:29:35
news-image

தடம்புரண்ட சர்வதேச உறவு

2026-01-18 05:21:14