இருக்­கி­றதா அர்ப்­ப­ணிப்பு?

Published By: Vishnu

10 Sep, 2023 | 05:58 PM
image

என்.கண்ணன்

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 54 ஆவது கூட்­டத்­தொடர் நாளை ஜெனி­வாவில் ஆரம்­பிக்­க­வுள்ள நிலையில், சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை உள்­ளிட்ட 9 சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் இலங்கை தொடர்­பாக அறிக்கை ஒன்றை கூட்­டாக வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.

சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, மனித உரி­மைகள் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான ஆசிய மன்றம், பிரான்­சிஸ்கன்ஸ் இன்­ர­நெ­ஷ னல்,

புரொன்ட்லைன் டிபென்டர்ஸ், மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், சர்­வ­தேச நீதி­யாளர் ஆணையம், மனித உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச சம்­மே­ளனம், சிறி­லங்கா தொடர்­பான சர்­வ­தேச பணிக்­குழு, ஸ்ரீலங்கா கம்பெய்ன், ஆகிய 9 அமைப்­பு­களே இந்த அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.

ஜெனிவா கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்­க­வுள்ள சூழல் மாத்­திரம் இதில் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை, இலங்கை அர­சாங்கம், தேசிய ஒற்­றுமை மற்றும்  நல்­லி­ணக்க ஆணைக்­குழு என்ற பெயரில் பொறி­முறை ஒன்றை நிய­மிக்கப் போவ­தாக கூறி­வ­ரு­கின்ற நிலை­யிலும் தான், இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருக் ­கி­றது.

தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு என்ற பெயரில்- அர­சாங்கம் உரு­வாக்கப் போவ­தாக கூறும் பொறி­முறை எப்­போது நடை­மு­றைக்கு வரும் என்றோ, அது வருமா வராதா என்றோ உறு­தி­யில்லை.

ஆனால், நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு பொறி­மு­றை­யாக இதனை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்தி வரு­கி­றது.

கடந்­த­கால மீறல்கள் தொடர்­பாக நீதி­யான விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம், ஐ.நா மனித உரி­மைகள் பேரவை பல தீர்­மா­னங்­களின் ஊடாக கோரிய போது அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டன.

பின்னர், கலப்பு விசா­ரணைக் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்க வலி­யு­றுத்­திய போது அதுவும் அர­சாங்­கத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

தற்­போது ஜெனிவா பேர­வையின் தீர்­மா­னத்­துக்கு அமைய, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் ஒழுங்­க­மைப்பில், சாட்­சி­யங்கள் மற்றும் சான்­று­களை சேக­ரித்துப் பகுப்­பாய்வு செய்து பாது­காக்கும் பணி­யகம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த அலு­வ­லகம் தற்­போது கடந்­த­கால மீறல்கள் தொடர்­பான சாட்­சி­யங்­க­ளையும், சான்­று­க­ளையும் திரட்டி, ஆவ­ணப்­ப­டுத்­து­கின்ற நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கி­றது. இது அடுத்த கட்­ட­மாக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் இறங்­கு­வ­தற்­கான ஒரு முன்­னோடி செயற்­பா­டாக கரு­தப்­ப­டு­கி­றது. இந்தக் கட்­ட­மைப்­பையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென அர­சாங்கம் அறி­வித்து விட்­டது.

வெளி­யாரின் தலை­யீட்­டுடன் நிலை­மாறு­கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்கு நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை என்றும், அர­சி­ய­ல­மைப்பின் வரை­ய­றை­க­ளுக்கு அப்பால் செல்ல முடி­யாது என்றும் ஜெனி­வா­வுக்கு அர­சாங்கம் அறி­வித்து விட்­டது.

எனினும், போர்க்­கால மீறல்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச அரங்கில் அர­சாங்­கத்­துக்கு வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இந்த நல்­லி­ணக்கப் பொறி­முறை தொடர்­பான யோச­னையை  பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்துப் பேசிய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்த பொறி­முறை செயற்­படத் தொடங்­கினால், ஒவ்­வொரு முறையும் ஜெனி­வாவில் பதி­ல­ளித்துக் கொண்­டி­ருக்கும் நிலையை முடி­வுக்கு கொண்டு வரலாம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். ஜெனி­வா­வுக்குப் பதி­ல­ளிப்­பதை ஆட்­சியில் உள்ள எல்லா அர­சாங்­கங்­களும், ஒரு வெறுப்­பான விட­ய­மா­கவே பார்க்­கின்­றன.

தற்­போ­தைய அர­சாங்கம், ஜெனி­வா­வுக்கும் கூட தேசிய ஒற்­று­மைக்­கான நல்­லி­ணக்கப் பொறி­மு­றையை உரு­வாக்கி, இணக்­கப்­பாட்­டை ­ஏற்­ப­டுத்தப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது. அதா­வது, ஜெனிவா நெருக்­க­டியைத் தணிப்­ப­தற்­கான ஒரு மூலோ­பா­ய­மா­கவே இந்த பொறி­மு­றையை அர­சாங்கம் கையா­ளு­கி­றது.

ஆனால், இந்தப் பொறி­முறை நியா­ய­மான வகையில் செயற்­ப­டுமா, நீதியை பெற்றுக் கொடுக்­குமா என்ற சந்­தே­கங்கள் வலு­வாக உள்­ளன.

பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்­க­ளிடம் இந்தப் பொறி­முறை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­ப­டவோ, அவர்­களின் கருத்­துக்கள் கேட்­கப்­ப­டவோ இல்லை.

அவர்கள் இந்தப் பொறி­மு­றையின் மீது நம்­பிக்கை வைக்­கவும் இல்லை. இந்தப் பொறி­மு­றையின் ஊடாக நீதி கிடைக்கும் என்று எதிர்­பார்க்­க­வு­மில்லை.

ஏனென்றால் இது முற்­றிலும் உள்­நாட்டுப் பொறி­மு­றை­யா­கவே இருக்கும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

உரு­வாக்­கப்­படும் பொறி­முறை எத்­த­கைய கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருந்­தாலும், அது உள்­நாட்டு பொறி­மு­றை­யாக இருந்தால் நிச்­சயம், பாதிக்­கப்­பட்ட மக்­களால் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்­காது. இலங்­கையின் வர­லாற்றுப் பாடங்­களில் இருந்து அவர்கள் கற்றுக் கொண்ட விடயம் இது.

இலங்கை அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு இன­வாத நாடு. இங்கு எல்­லா­வற்­றிலும் அர­சியல் உள்­ளது.

சனல் 4 வெளி­யிட்­டுள்ள ஆவ­ணப்­ப­டத்தில், ராஜ­பக் ­ஷ­வி­னரை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வர, அர­சாங்­கத்­துக்குள் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்த சக்­திகள் எடுத்த முயற்­சிகள் குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­கா­ரத்தில் இல்­லாது போனாலும், ராஜபக் ஷவி­னரைப் பாது­காக்­கின்ற அதி­கா­ரிகள் வட்டம் ஒன்று உயர்­மட்­டங்­களில் உரு­வாக்கி வைக்­கப்­பட்­டி­ருப்­பது வெளிச்­ச­மா­கி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்தில், எத்­த­கைய பொறி­மு­றை­களை உரு­வாக்­கி­னாலும், மீறல்­க­ளுக்குக் கார­ண­மான குற்­ற­வா­ளி­களை கண்­டு­பி­டிக்­கவோ, தண்­டிக்­கவோ முடி­யாது.

அதை­விட சிங்­கள பௌத்த மேலா­திக்கம் என்­பது தமி­ழர்­களை அடி­மை­யாக நினைக்­கி­றதே தவிர, சம உரிமை கொண்­ட­வர்­க­ளாக பார்க்­க­வில்லை. தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்கு நியாயம் வழங்­கப்­பட வேண்டும் என்ற மனோ­நிலை அவர்­க­ளிடம் கிடை­யாது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் உள்­நாட்டுப் பொறி­மு­றை­களால் எந்த தீர்­வையும்- நீதி­யையும் பெற்றுக் கொடுக்க முடி­யாது என்­பது திண்ணம்.

அதனால் தான் தமிழ் மக்கள் 14 ஆண்­டு­க­ளாக சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள்.

அந்தக் கோரிக்­கைக்கு சர்­வ­தேச அரங்கில் ஆத­ரவும் உள்­ளது. காரணம் இலங்கை ஆட்­சி­யா­ளர்­களின் ஏமாற்­றுத்­த­னங்­க­ளையும், வாக்­கு­றுதி மீறல்­க­ளையும் அவர்கள் நன்­றா­கவே உணர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்தச் சூழலில் தான் அர­சாங்கம், உண்­மையை வெளிக் கொண்டு வரு­வ­தற்­கான தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை உரு­வாக்கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தது.

ஐ.நாவையும் சர்­வ­தேச பொறுப்­புக்­கூறல் முயற்­சி­களின் கவ­னத்­தையும் திசை திருப்­பு­வ­தற்­கா­கவே- பொறுப்­புக்­கூறல் அழுத்­தங்­களில் இருந்து தப்­பிப்­ப­தற்­கா­கவே அர­சாங்கம் இந்த பொறி­மு­றையைப் பயன்­ப­டுத்த முனை­கி­றது என்­பது தான் உண்மை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தான், ஒன்­பது சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­பு­களின் கூட்டு அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

இலங்­கையின் நீண்ட வர­லாற்றில் இது­போன்ற பல ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்றும், எந்­த­வொரு ஆணைக்­கு­ழுவும், நீதி, உண்மை, இழப்­பீட்டை பெற்றுக் கொடுக்­க­வில்லை என்றும் இந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.

மீண்டும் ஒரு ஆணைக்­கு­ழுவை அமைப்­பதன் மூலம், அதே தவறு மீண்டும் விடப்­ப­டு­வ­தா­கவும் மனித உரிமை அமைப்­புகள் எச்­ச­ரித்­தி­ருக்­கின்­றன.

புதிய ஆணைக்­கு­ழுவின் செயற்­திறன் குறை­பா­டு­களை பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில், தண்­ட­னையில் இருந்து தப்­பிக்கும் நிலை­யையும் அதற்கு அர­சாங்கம் துணை­போ­கின்ற சூழலும் எடுத்துக் காட்­டப்­பட்­டுள்­ளது.

கொழும்பில் 11 இளை­ஞர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வர்­தன அண்­மையில் பாகிஸ்­தா­னுக்­கான இலங்கைத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் மனித உரிமை அமைப்­புகள் விச­னத்­துடன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

குற்­றம்­சாட்­டப்­ப­டு­ப­வர்கள் பலர் அர­சாங்­கத்தில் உயர் பத­வி­களில் இருப்­ப­தா­கவும் அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு தடைகள் இருப்­ப­தா­கவும், இது உள்­நாட்டு பொறி­மு­றை­களின் மீது நம்­பிக்­கை­யற்ற நிலையை தோற்­று­விப்­ப­தா­கவும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றன.

இவற்­றுக்கு அப்பால், சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் குற்­றங்­க­ளுக்­கான தனிப்­பட்ட குற்றப் பொறுப்பை நிறு­வு­வதை நோக்­க­மாகக் கொண்ட குற்­ற­வியல் விசா­ர­ணைகள் மற்றும் வழக்­கு­க­ளுக்கு மாற்­றாக உண்மை ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­படக் கூடாது என்றும்,

எந்­த­வொரு நம்­ப­க­மான உண்­மையைத் தேடும் பொறி­மு­றையும், சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் குற்­றங்கள் குறித்து சிவில் நீதி­மன்­றங்­களில் வழக்குத் தொடர பரிந்­து­ரைக்கும் அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்­புகள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

பத்­தோடு பதி­னொன்­றாக ஒரு ஆணைக்­கு­ழுவை அமைத்து விட்டு, நிலு­வையில் உள்ள பொறுப்­புக்­கூறல் அழுத்தங்களை கடந்து சென்று விடலாம் என்ற அரசாங்கத்தின் திட்டத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் இந்த அறிக்கை வெளியாகிய பின்னர் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வழமைக்கு மாறாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், போர்க்குற்ற அட்டூழியங்கள், மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றில் இலங்கை தொடர்ச்சியான பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், நாடு முன்னேறுவதற்கு இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அதற்கு அப்பால் அவர் ஒரு தீர்க்கமான விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார், “உண்மையைத் தேடுவது மட்டும் போதாது. பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் விருப்பத்துடன் அது இருக்க வேண்டும்.” என்பதே அது.

அத்தகைய அர்ப்பணிப்பும், அரசியல் விருப்பும், அதற்கான துணிச்சலும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறதா?

கொழும்பில் 11 இளை­ஞர்கள் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­வர்­தன அண்­மையில் பாகிஸ்­தா­னுக்­கான இலங்கைத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் மனித உரிமை அமைப்­புகள் விச­னத்­துடன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றன.

குற்­றம்­சாட்­டப்­ப­டு­ப­வர்கள் பலர் அர­சாங்­கத்தில் உயர் பத­வி­களில் இருப்­ப­தா­கவும் அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு தடைகள் இருப்­ப­தா­கவும், இது உள்­நாட்டு பொறி­மு­றை­களின் மீது நம்­பிக்­கை­யற்ற நிலையை தோற்­று­விப்­ப­தா­கவும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றன. இவற்­றுக்கு அப்பால், சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் குற்­றங்­க­ளுக்­கான தனிப்­பட்ட குற்றப் பொறுப்பை நிறு­வு­வதை நோக்­க­மாகக் கொண்ட குற்­ற­வியல் விசா­ர­ணைகள் மற்றும் வழக்­கு­க­ளுக்கு மாற்­றாக உண்மை ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­படக் கூடாது என்றும்,

எந்­த­வொரு நம்­ப­க­மான உண்­மையைத் தேடும் பொறி­மு­றையும், சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் குற்­றங்கள் குறித்து சிவில் நீதி­மன்­றங்­களில் வழக்குத் தொடர பரிந்­து­ரைக்கும் அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்க வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்­புகள் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன.

பத்­தோடு பதி­னொன்­றாக ஒரு ஆணைக்­கு­ழுவை அமைத்து விட்டு, நிலு­வையில் உள்ள பொறுப்­புக்­கூறல் அழுத்தங்களை கடந்து சென்று விடலாம் என்ற அரசாங்கத்தின் திட்டத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் இந்த அறிக்கை வெளியாகிய பின்னர் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வழமைக்கு மாறாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், போர்க்குற்ற அட்டூழியங்கள், மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றில் இலங்கை தொடர்ச்சியான பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், நாடு முன்னேறுவதற்கு இதற்கு  தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அதற்கு அப்பால் அவர் ஒரு தீர்க்கமான விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார், “உண்மையைத் தேடுவது மட்டும் போதாது. பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப் பணிப்பு மற்றும் தொலைநோக்கு மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் விருப்பத்துடன் அது இருக்க வேண்டும் ” என்பதே அது.

அத்தகைய அர்ப்பணிப்பும், அரசியல் விருப்பும், அதற்கான துணிச்சலும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறதா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06
news-image

வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பா கண்டம்?

2024-06-16 19:18:28
news-image

முஸ்லிம்களின் அபிலாஷையும் ஐந்து கிலோ அரிசிப்...

2024-06-16 16:03:00