யாழ்தேவி புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றும் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம் வருகின்றதென சமிஞ்கை போடப்பட்டிருந்த நிலையில், குறித்த இராணுவ வீரர்கள் தாம் பயணித்த ஜீப் வண்டியை புகையிரத கடவையில் கடந்துசெல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் மற்றும் படுகாயமடைந்த இராணுவ வீரரையும் எடுத்துக் கொண்டு புகையிரதம் மீண்டும் யாழ். புகையிரத நிலையத்தினைக் நோக்கி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM