இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவராக மலிங்க தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியும்  அவரிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.