நரம்பு வலி பாதிப்புக்குரிய சிகிச்சை

09 Sep, 2023 | 05:17 PM
image

இன்றைய காலகட்டத்தில் அலுவலகத்தில் பணியாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நரம்பு சார்ந்த வலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் 7 - 8 சதவீத மக்களுக்கு நரம்பியல் வலி இருப்பதாக அண்மைய‌ ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

நரம்பு சார்ந்த வலி என்பது நரம்பியல் திசுக்களில் ஏற்படும் காயம் அல்லது அதில் ஏற்படும் ஏதேனும் பிரச்சினையின் பக்க விளைவாக உருவாகிறது. இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இடுப்பு பகுதியில் வலி, தோள்பட்டை பகுதியில் வலி, தசை கூட்டு வலி, தாடை சுற்றியுள்ள பகுதிகளில் வலி, இதுபோன்ற பகுதிகளில் தீவிர வலி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குத்துவது போன்ற உணர்வு... முதலான அறிகுறிகள் ஏற்பட்டால் நரம்பியல் பாதிப்பின் காரணமாக வலி ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

வேறு ஏதேனும் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் காரணமாகவோ அல்லது நரம்பியல் பகுதிகளில் உண்டாகும் அழுத்தம் காரணமாகவோ இத்தகைய வலி உண்டாகிறது. மேலும் சில தொற்றுகள் காரணமாகவும், வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாகவும், நாளங்களில் ஏற்பட்ட சிதைவின் காரணமாகவும் இந்த வலிகள் உண்டாகின்றன.

இவர்களுக்கு எம்.ஆர்.ஐ. பரிசோதனை அல்லது திசு பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.‌

வலியை நீக்குவதற்கு முதன்மையான நிவாரண சிகிச்சையாக ஸ்டீரொய்ட் மருந்தியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.‌ வேறு சிலருக்கு இத்தகைய சிகிச்சையுடன் உடற்பயிற்சி, அறிவுத்திறன் மற்றும் நடத்தை சிகிச்சை, தியானம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சிகிச்சைகளின் மூலமாக நிவாரணம் அளிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10
news-image

உர்டிகாரியா பிக்மெண்டோசா எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2023-09-15 17:08:22
news-image

அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய...

2023-09-14 20:58:17
news-image

செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்: ...

2023-09-14 11:53:53
news-image

இரைப்பை புற்று நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2023-09-13 12:38:49
news-image

இரத்த சர்க்கரையின் அளவு தொடக்க நிலையில்...

2023-09-12 14:14:36