அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி இயக்குநர் 'கலாசூரி' திவ்யா சுஜேனின் மாணவியும் நடராஜா திலீபன், திருமதி காயத்திரி திலீபன் தம்பதியரின் புதல்வியுமான காவிய திலீபனின் 'தொன்மாவிலங்கை' பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 02ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக ‘கலாநிதி’ ராஜ்குமார் பாரதி கலந்துகொண்டதுடன் கெளரவ விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக நாட்டிய கலாகேந்திரா இயக்குநர் ‘கலாநிதி’ கிருஷாந்தி ரவீந்திரா, கிளிநொச்சி இந்து கல்லூரி அதிபர் மீனலோஜினி இதயசிவதாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாணவியை ஆர்வதிப்பதையும் முதன்மை விருந்தினரான ‘கலாநிதி’ ராஜ்குமார் பாரதி, மாணவி, அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியையுடன் மேடையில் நிற்பதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM