(நெவில் அன்தனி)
இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டிக்கு இருப்பு நாள் (Reserve Day) ஒதுக்கபட்டுள்ளது குறித்து உண்மையிலேயே ஆச்சிரியப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் வெள்ளிக்கிழமை (08) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
பல அணிகள் பங்குபற்றும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இடைநடுவில் இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு மாத்திரம் இருப்பு நாள் வழங்க திடீர் முடிவு எடுக்கப்பட்டது குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என கிறிஸ் சில்வர்வூடிடம் கேட்டபோது,
'நேர்மையாக சொல்வதென்றால், இந்த அறிவிப்பை கேட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் போட்டிகளை நாங்கள் ஏற்பாடு செய்வதில்லை.. ஆகையால் அது குறித்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பு நாளில் போட்டியில் முடிவு ஏற்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டால்தான் ஒரே ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால் அதுபற்றி கரிசனை கொள்ளாமல் தொடர்ந்து எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து எமது அணி கவனம் செலுத்தும்' என்றார்.
இதே கேள்விக்கு பதிலளித்த சந்திக்க ஹத்துருசிங்க, 'இந்த விடயம் பெரும் ஆச்சரியத்தை தருகிறது. பல அணிகள் பங்குபற்றும் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து இப்போதுதான் முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். ஆனால், அது பற்றி எம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அது போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் எடுத்த தீர்மானம்' என பதிலளித்தார்.
இது இவ்வாறிருக்க, ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பாளர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு இருப்பு நாள் ஒதுக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.
இன்றைய போட்டி
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த முக்கிய போட்டியில் இரண்டு அணிகளும் தத்தமது வெற்றிகளுக்காக முயற்சிக்கும் என இரண்டு அணிகளினதும் பயிற்றுநர்கள் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM