வீட்டில் ஐஸ்வர்யத்தை வரவழைப்பதற்கான எளிய பரிகாரங்கள்

09 Sep, 2023 | 05:17 PM
image

இன்றைய திகதியில் அரசாங்க ஊழியராக இருந்தாலும்.. சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகளாக இருந்தாலும்.. விவசாயம், நுகர்வோர் வணிகம் என சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும்... எந்த பணியில் இருந்தாலும் அனைவருக்கும் பணம் என்பது அவசியம். 

பணத்திற்கு அதிபதி மகாலட்சுமி. மகாலட்சுமி எம்முடைய வீட்டிற்கு வருகை தந்து நிரந்தரமாக தங்கி அருள் புரிய வேண்டும் என்றால் பின்வரும் நான்கு எளிய பரிகாரங்களை மேற்கொண்டால் போதுமானது. மகாலட்சுமி வீட்டில் தங்கி அருள் புரிவார்.

முதலில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூசியும், துகளும் அழுக்கும் இருக்கவே கூடாது. எம்மில் சிலர் வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்திருப்பர். வேறு சிலர் பூஜை அறையை மட்டுமே சுத்தமாக வைத்திருப்பர். ஆனால் மகாலட்சுமி வீட்டில் தங்கி அருள் புரிய வேண்டும் என்றால், முழுமையான வீடும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதை நாளாந்தம் கடமையாக மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக எம்முடைய வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் நறுமணம் கமழ வேண்டும். அதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மூலிகை  சாம்பிராணியை புகைமூட்ட வேண்டும். நறுமணம் கமழும் இடங்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

மூன்றாவதாக எம்முடைய வீட்டில் இனிமையான இசையை ஒலிக்கவைக்க வேண்டும். மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற பக்தி இசையை ஒலிக்க வைப்பதன் மூலம் எம்முடைய வீடுகளில் நேர் நிலையான அதிர்வலைகளை உருவாக்கலாம். பக்தி இசையும், நேர் நிலையான அதிர்வலைகளும் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி விரும்பி வாசம் செய்வாள்.

நான்காவதாக மகாலட்சுமியின் அம்சம் என போற்றப்படும் எம்முடைய வீட்டுப் பெண்மணிகளின் கண்களில் கண்ணீர் வராமல் அவர்களின் மனதை ஆனந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அதாவது அவர்கள் மனம் வருந்தி கண்ணீர் விடக்கூடாது. அப்படி எம்முடைய வீட்டு பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தால்... மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறுவார். மேலும் என்னிடம் இருக்கும் ஐஸ்வர்யமும் வளராமல் குன்றத் தொடங்கும். எம்முடைய வீட்டில் எம்முடன் வசிக்கும் தாய், மனைவி, மகள், அப்பம்மா ஆகியோர்களின் மனம் நோகும்படி எந்த விடயத்தையும் நாம் செய்தல் ஆகாது. அவர்களின் மனம் குளிர்ந்தால் தான் மகாலட்சுமியின் நல்லருள் கிடைக்கும்.

இந்த நான்கு விடயத்தையும் நாம் தொடர்ச்சியாக பின்பற்றி வரும்போது எம்முடைய வீடுகளிலும், எம்முள்ளும் நேர் நிலையான ஆற்றல்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஜன வசியம், தன வசியம், தொழில் வசியம்... ஆகியவை ஏற்பட்டு பொருளாதாரத்தில் நினைத்துப் பார்க்காத உயரத்தை எட்ட இயலும்.

மேலே கூறிய நான்கு எளிய பரிகாரங்களை கடைப்பிடிப்போம். மகா லட்சுமியை வீட்டிற்குள் வரவழைத்து வாசம் செய்ய வைப்போம். அதனூடாக செல்வ நிலையில் உயர்வோம். மன மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் பெறுவோம்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி பெறுவதற்கான நட்சத்திர சூட்சமம்...!?

2024-09-12 16:40:45
news-image

கண்டாந்திர நட்சத்திர தோஷமும், பரிகாரமும்

2024-09-11 17:16:39
news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29
news-image

2024 செப்டம்பர் மாத ராசி பலன்கள் 

2024-08-31 12:34:23
news-image

மாணவர்களின் கல்விப் புலமை மேம்படுத்துவதற்கான எளிய...

2024-08-30 15:49:59
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் கையெழுத்து பரிகாரம்...!?

2024-08-28 17:12:21
news-image

தனம் சேருவதற்கான எளிய வழிமுறைகள்...! பரிகாரங்கள்..!?

2024-08-27 17:41:54