பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள்காமாலை பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

08 Sep, 2023 | 03:32 PM
image

பிறந்த பச்சிளம் குழந்தைகளின் சிலருக்கும், குறை பிரசவத்தில் பிறக்கும் சில பச்சிளங் குழந்தைகளுக்கும், பிறந்த 48 மணி நேரத்திற்குள் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு தற்போது போட்டோ தெரபி என்ற நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிற மாற்றம் ஏற்படும். இது குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாகும். இதன் போது குழந்தையின் குருதியிலுள்ள சிவப்பு ரத்த அணுக்களின் மஞ்சள் நிறமியான பிலிரூபின்.. இயல்பான அளவைவிட, கூடுதலாக இருப்பதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மை துல்லியமாக அவதானித்து, குழந்தைகளுக்கு போட்டோ தெரபி எனப்படும் ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் ரத்த மாற்று சிகிச்சை போன்றவற்றின் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

அல்ட்ரா வயலட் கதிர்களின் பிரத்தியேக ஒளி கதிர்கள் மூலமாக நீலம் மற்றும் பச்சை வண்ண ஒளியைப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம் பச்சிளம் குழந்தைகளின் உடல் மீது செலுத்தப்படும் போது அவை உடலுக்குள் ஊடுருவி சென்று பிலுரூபின் எனப்படும் மூலக்கூறுகளின் வடிவத்தையும், கட்டமைப்பையும் மாற்றுகிறது. குழந்தைகளின் பாதிப்பை பொறுத்து ஒரு விளக்கு, இரண்டு விளக்கு மற்றும் மூன்று விளக்கு மூலமாக ஒளிக் கதிர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

டொக்டர் தனசேகர்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10
news-image

உர்டிகாரியா பிக்மெண்டோசா எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2023-09-15 17:08:22
news-image

அலர்ஜிக்ரினிடீஸ் எனும் ஹே காய்ச்சல் பாதிப்பிற்குரிய...

2023-09-14 20:58:17
news-image

செப்ஸிஸ் (Sepsis) குறித்து அவதானமாக இருப்போம்: ...

2023-09-14 11:53:53
news-image

இரைப்பை புற்று நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2023-09-13 12:38:49
news-image

இரத்த சர்க்கரையின் அளவு தொடக்க நிலையில்...

2023-09-12 14:14:36