இலங்கைக்கு 25,000 கிலோ அரிசியை பாகிஸ்தான் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாகிஸ்தான் மக்களின் அன்பளிப்பு எனும் தொனிப்பொருளின் கீழ், குறித்த அரிசி வகையை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஜ் சகிவுள் ஹுசைன் , அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்கு வழங்கியுள்ளார். 

மேலும் குறித்த அரிசி வகை இன்று மாலை பாகிஸ்தானின் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.