யாழ். நகரில் 2 மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

08 Sep, 2023 | 12:00 PM
image

யாழ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. 

யாழ். போதனா வைத்தியசாலை சூழல், மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களே களவாடப்பட்டுள்ளன. 

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் திருட்டு கும்பல்கள் கைது செய்யப்படவில்லை. 

குறித்த திருட்டு கும்பல்கள் வலையமைப்பாக செயற்பட்டு வருவதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உதிரி பாகங்களாக கழட்டி விற்பனை செய்வதனால், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மீட்கவோ, திருட்டு கும்பல்களை கைது செய்வோ பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில்  புதன்கிழமை (06)  யாழ்.நகர் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, திருடன் உருட்டி செல்வது வங்கியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. 

குறித்த காணொளி காட்சியை அடிப்படையாக கொண்டு யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், திருடனை அடையாளம் கண்டுள்ளதாகவும், கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20
news-image

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எனது காளைகளும்...

2025-01-15 17:33:04