யாழ். குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்து உள்ளது. 

குறித்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து காங்கேசன்துறை வீதிவழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குளப்பிட்டி சந்தியால் ஆனைக்கோட்டை பக்கமாக திரும்பியுள்ளது.  இதன் போது பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேன் திரும்பும் வரையில் வீதியில் தரிந்து நின்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் மிக வேகமாக வந்த படிரக வாகனம் தரித்து நின்ற முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

இந்நிலையில் படிரக வாகனம் மோதியதில் நிலைத்தடுமாறிய முச்சக்கர வண்டி முன்னால் இருந்த வேனுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியினுள் இருந்த கர்ப்பிணி பெண் உட்பட மூவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷடவசமாக  உயிர் தப்பியுள்ளனர். 

விபத்து சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.