வன்னியில் மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு : மதுபானசாலைகளுக்கு அனுமதி - தமிழ் தேசிய கூட்டமைப்பு

Published By: Vishnu

07 Sep, 2023 | 07:24 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வன்னியில் புதிதாக மருந்தகங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக புதிதாக பல மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புதிதாக மதுபானசாலைகளை அமைப்பதால் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் 20000 வைத்தியர்களில் 1500 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளதுடன் மேலும் 5000 பேர் வெளிநாடு செல்ல தயாராகி வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பாடசாலைகள் மூடப்படுவதை போன்று வைத்தியசாலைகளும் மூடப்படுமா? என்று எண்ண வேண்டியுள்ளது. இவ்வாறு இவர்கள் வெளியேறி செல்ல அரசாங்கம்தான் காரணமென்றால் இதுவரையில் அரசாங்கம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்கின்றேன்.

அண்மையில் யாழ். வைத்தியசாலையில் 8 வயது சிறுமியொருவரின் கை அகற்றப்பட்டுள்ளது. அவர் காய்ச்சலுக்காக சென்றவர். வைத்தியர்கள்,தாதிகள் விரக்தியில் இருப்பதனாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. அரச வைத்தியசாலைக்கு நோயாளர்கள் செல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சுகாதார அமைச்சருக்காக மாத்திரமன்றி முழு அரசாங்கத்திற்கும் எதிராகவே கொண்டு வந்திருக்க வேண்டும்.

வன்னியில் மருந்தகங்களை அமைக்க சுகாதார தரப்பினரிடம் அனுமதி கோரியிருந்த போதும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால் வன்னியில் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மதுபானசாலைகள் பலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களுக்கு இது வழங்கப்படுகின்றதா என்பது பிரச்சினையில்லை. ஆனால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேரத்தில் இவ்வாறு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது எதற்காக என்று கேட்கின்றேன்.

புதிதாக இவ்வாறு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கி அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக கருதுகின்றோம். மக்களை படுகுழிக்குள் தள்ளிவிட்டு அரசியல்வாதிகளை மாத்திரம் முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் மாற்றப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசாங்கமாக இருக்காது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழி தோண்டப்படுகிறது.சர்வதேச பரிமானங்களுக்கு அமைய அங்கு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய புதைகுழி தோண்டப்பட்டாலும்,நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.இதனை குருந்தூர் மலை விகாரை நிர்மாணிப்பு ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21