(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் தென்மேல் பருவ பெயர்ச்சி காலநிலையால் ஏற்பட்டுள்ள மழை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மரம் முறிந்து விழுந்தமை, கடும் காற்று, கடும் மழை, மணிசரிவு என்பவற்றின் காரணமாகவே இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், நுவரெலியா, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இம்மாவட்டங்களில் 204 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றும் மழை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்றைய தினம் புளத்சிங்கள பிரதேசத்தின் வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்பட்டன.
அத்தோடு மக்கொட மற்றும் பேருவளை புகையிரத நிலையங்களுக்கிடையில் மாகல்கந்த பிரதேசத்தில் புகையிரத வீதியில் மண்மேடு சரிந்து விழுந்தமையால் புகையிரத போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காலி செல்லும் இரவு தபால் புகையிரதமும் , மருதானையிலிருந்து அழுத்கம செல்லும் புகையிரதமும் பயாகல பிரதேசத்தில் சுமார் 2 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மேலும் அதிக மழை காரணமாக பெலியத்த - கஹவத்த பிரதேசத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த வயல்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்யப்படவிருந்த சுமார் 175 ஏக்கருக்கும் அதிக வயற்பரப்பில் காணப்பட்ட நெற்பயிர் செய்கையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
இக்காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாரத்னவிடம் வினவிய போது , தென்மேற்கு பருவப் பெயர்ச்சி கால நிலையின் இரண்டாம் கட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலையே நிலவும். இதன் காரணமாக வழமையாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்படக் கூடும். மழையுடனான காலநிலையின் போது காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும். இம்மாதம் 13ஆம் திகதியின் பின்னரே இந்த காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM