பதுளை பகுதியில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் ஈஸி கேஷ் ஊடாக பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பதுலுபிட்டிய மற்றும் மெதபன பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.