இலங்கையின் முன்னணி  Wall tiles மற்றும்  Floor tiles உற்பத்தியாளரான லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்காடைல்ஸ் பிஎல்சி, சூழல் வனப்பை பேணும் வகையில் சூழல் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. சுற்றுப்புறச் சூழலை பராமரிப்பது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்குரிய தனது பங்களிப்புக்காக லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்காடைல்ஸ் பிஎல்சி, அண்மையில் தனது சகல Wall tiles  மற்றும் Floor tiles தெரிவுகளுக்கும் இலங்கை சூழல்பாதுகாப்பு  கட்டிடசம்மேளனத்திடமிருந்து (Green Building Council of Sri Lanka- GBCSL)>GREENSL® Label(GREENSL®STAR) ஐ பெற்றிருந்தது. உலக சூழல் பாதுகாப்பு கட்டிட சம்மேளனத்தின் உள்நாட்டு பிரதிநிதியாக இந்த சம்மேளனம் காணப்படுகிறது.

வருடாந்த சூழல் பாதுகாப்பு கட்டிட செயலமர்வு மற்றும் சூழல் பாதுகாப்பு கட்டிடவிருதுகள் 2015 இன் போது, இந்த விருது லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்காடைல்ஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் பரந்தளவு தலைப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டிருந்ததுடன், இதில் சூழல்பாதுகாப்பான கட்டிட செயற்பாடுகள், நிலைபேறான கட்டிடங்கள் மற்றும் நிலைபேறான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தவிடயங்கள் ஆராயப்பட்டிருந்தன. இந்நிகழ்வில், 350க்கும் அதிகமான நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பொறியியலாளர்கள், கட்டிடக்கலைஞர்கள், அரசாங்க பிரதிநிதிகள், கொள்கை உருவாக்குநர்கள், கட்டிட உரிமையாளர்கள், கட்டிடங்கள் அமைப்போர், விநியோகஸ்த்தர்கள், நகரதிட்டமிடுநர்கள், இணைசூழல் பாதுகாப்பு நிபுணர்கள், சிவில், பொறியியல் மற்றும் இலத்திரனியல் ஆலோசகர்கள், ஒப்பந்தக்காரர்கள், கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

இந்தசான்றிதழளிப்பின் பிரதான இலக்குகளாக, தயாரிப்பின் சூழல்சார் தெரிவை இனங்காண்பது, ஆயுள்சுழற்சி கவனிப்புகள் அடிப்படையானவிடயங்கள் மற்றும் பொருட்களின் ஆயுட்காலம் முழுவதும் சூழலுக்கு நட்புறவாககாணப்படல் போன்றன அமைந்துள்ளன. GBCSLஇனால் வழங்கப்பட்டுள்ள The Green Label (GREENSL® STAR) சான்றிதழின் மூலமாக, நிர்மாணத் துறையில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள்ஃமூலப்பொருட்கள் அனைத்தும் சூழலுக்கு நட்புறவான வகையில் அமைந்திருத்தல், உள்நாட்டில் சூழலுக்கு பாதுகாப்பான பொருட்கள்ஃமூலப்பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவித்தல், சூழலுக்கு பாதுகாப்பான பொருட்கள்ஃமூலப்பொருட்கள் பாவனையினால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் தொடர்பில் அதிகளவு விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் சூழலுக்கு நட்புறவான தயாரிப்புகள்ஃமூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் வர்த்தகர்களுக்கு சலுகைகளை வழங்க அரச அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. GREENSL®STARசான்றிதழை வழங்குவதன் பிரதான இலக்கு, சர்வதேச ஏற்றுக் கொள்ளலுடன், சூழலுக்குபாதுகாப்பான நிலைபேறான நிர்மாண கொள்கைகளை ஊக்குவித்தலாகும். இதன் பாரம்பரிய இலக்கு, பொருட்கள்ஃமூலப்பொருட்கள் சூழலுக்கு ஆகக்குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதாகும். GREENSL®STARஅடையாளமிடப்பட்ட தயாரிப்பொன்றை பயன்படுத்துவதன் மூலமாக, நிர்மாணச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர், தமது கட்டிடங்களுக்கு சூழலுக்கு பாதுகாப்பான தரப்படுத்தல்களை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது, அதிகளவு புள்ளிகளைப் பெற்றுக் கொள்வார்கள்.

லங்கா வோல்டைல்ஸ் பிஎல்சி மற்றும் லங்காடைல்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் 

திரு. மஹேந்திர ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில்,“GREENSL® STAR சான்றிதழைப் பெற்றுள்ள உற்பத்தியாளர்களில் ஒருவர் எனும் வகையில், இந்த கௌரவிப்பை பெற்றுள்ளமை மிகவும் பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. இந்த சான்றிதழை எமது தயாரிப்புகளில் பின்பற்றுவதன் மூலமாக, சூழலுக்கு பாதுகாப்பான தயாரிப்புகளை இலங்கையின் நிர்மாணத்துறையில் பயன்படுத்துவதற்கு எம்மால் ஊக்குவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளல், உற்பத்திசெய்தல், தயாரிப்புக்களை பயன்படுத்தல் மற்றும் அவற்றை அகற்றுதல் போன்ற சகல செயற்பாடுகளும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கும்”என்றார்;.

GREENSL® STAR Labeling System ஆனது, உள்நாட்டில் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக காணப்படுகிறது. குறிப்பாக மத்திய சூழல் அதிகார சபை இதனை பரிந்துரைத்துள்ளது. சர்வதேச மட்டத்தில் GBCSL அங்கத்துவம் காணப்படுகின்றமை காரணமாக, 120 க்கும் மேற்பட்டநாடுகளில் பின்பற்றப்படும் சூழலுக்கு நட்புறவான கட்டிட நிர்மாண செயற்பாடுகளின் அனுகூலம் இலங்கைக்கும் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.