இராணுவத்தின் உதவியுடன் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி ; விக்ரமபாகு கருணாரட்ண

Published By: Priyatharshan

08 Feb, 2017 | 04:54 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

சைட்டம் விவகாரத்தை பூதாகரப்படுத்தி இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் சதிகாரர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனினும் ஜனநாயக ரீதியாக பாராளுமன்றத்தினூடாக நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

நாட்டில் சதி முயற்சிகளை தயார்படுத்துவதற்கு ஏராளமான நிதி தேவை. அதற்கான நிதியினையும் தற்போது சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். தமது ஆதரவு குழுக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வன்முறை நிலையினை தோற்றுவித்து நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை எனவும் இராணுவத்தை பலமாக்க வேண்டுமெனவும் கடும்போக்கு கருத்துகளை வெளியிட்டு சதி செய்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான  திட்டம் தயார்படுத்தப்படுகிறது.

எனவே அது தொடர்பில் மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறான சதிமுயற்சிகளுக்கு உட்பட்டுவிடக்கூடாது. மேலும் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு புத்திசாதூரியமாக நடந்துகொள்ள வேண்டும்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்