சுதந்திர தின எதிர்ப்பு வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த செல்வம் எம்.பிக்கு பிணை

Published By: Vishnu

06 Sep, 2023 | 09:02 PM
image

சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிசாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி புதன்கிழமை (06.09.2023) மதியம் யாழ்ப்பாணம் நீதாவன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான பேரணியில் பங்களித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட போது நீதிமன்றில் பிரசன்னமாகாமைக்காக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிரேஷ்ட சட்டத்தரணி என். சிறிகாந்த ஊடாக மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மன்று ஆட்பிணையில் செல்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு அனுமதித்திருந்தது.  இவ்வழக்கில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் பிணை ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48